”அன்பில் மகேஷ் மீது ஊழல் வழக்கு” : மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை : ரூ.100 கோடி ஊழல் புகார் எதிரொலி...?

ஊழல் புகார் எதிரொலியாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷூக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வரும் போலீசார், ஊழல் வழக்கை பதிவு செய்து இருக்கிறார்கள்.
police conducting searches at premises belonging to former DMK Minister Anbil Mahesh, registered  corruption case
police conducting searches at premises belonging to former DMK Minister Anbil Mahesh, registered corruption casesource:thamizhalai,ai generated
2 min read

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்

திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவருக்கு சொந்தமான திருச்சிராப்பள்ளி, தென்னூரில் உள்ள அண்ணா நகர் வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம்?

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்க, சுமார் 100 கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கியதாக ஒரு புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் ரெய்டு நடந்ததாக சொல்லப்படுகிறது.

ஆதாரங்களை திரட்ட, சென்னை மற்றும் திருச்சியில் அவருக்கு தொடர்புடைய பல இடங்களிலும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

பணப் பரிவர்த்தனைகள் குறித்து ஆய்வு

தனியார் பள்ளி நிர்வாகங்களுடன் நடந்த பணப் பரிவர்த்தனைகள் மற்றும் அதுதொடர்பான ஆவணங்களை சரிபார்க்கவே இந்த சோதனை நடப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 கோடி ஊழல் - அரசகுமார் கைது

ஏற்கனவே இந்த வழக்கில் பிடி அரசகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முத்துக்குமார் தலைமறைவாக உள்ள நிலையில், அன்பில் மகேஸ் இல்லத்தில் சோதனை நடத்தப்படுகிறது.

அரசகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அவர் அளித்த தகவல்களை கொண்டு சோதனை நடத்தப்படுவதாக, போலீசார் தெரிவிக்கின்றனர்.

காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை

இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் அரசு அனுமதி பெற்று தருவதாக கூறி...

பணம் பெற்று மோசடி செய்தது தொடர்பான வழக்கில் சென்னை மற்றும் திருச்சியிலுள்ள இடங்களில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது.

தனியார் பள்ளிகளிடம் பண வசூல்

தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் நிரந்தர அங்கீகாரம் (Permanent Recognition), பள்ளி தர உயர்வு (Upgradation), DTCP அனுமதி மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ...

பணம் வசூலித்து மோசடி செய்ததாக Federation of Associations of Private School In Tamil Nadu-ன் செயலாளர் இளங்கோவன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் புகாரின்பேரில்...

பி.டி. அரசகுமார் கைது - குண்டர் சட்டம்

சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய B.T.அரசகுமார் என்பவர் கைது செய்யப்பட்டு, பின்னர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 2 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

250 பேரிடம் தீவிர விசாரணை

இவ்வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் விரிவான முறையில் விசாரணை மேற்கொண்டு...

இதுவரை, 250-க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு. பள்ளிக் கல்வித்துறை மற்றும் அலுவலகங்களைச் சேர்ந்த பல்வேறு அரசு அலுவலர்களும் விசாரணை செய்து, அதன் தொடர்புடைய அரசு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மோசடி செய்ததாக புகார்

இதுவரை, 177 பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகளிடம் பல கோடி ரூபாய் தொகை வசூலிக்கப்பட்டு, நம்பிக்கை மோசடி செய்ததாக முதற்கட்டமாக தெரியவந்துள்ளதாகவும்...

புகார்கள் தொடர்ந்து பெறப்பட்டு, நிதி மோசடி தொடர்பான விசாரணையின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் தொடர்புடைய நபர்களின் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன என்றும் மத்திய குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

அரசகுமார் வங்கிக் கணக்குகள் முடக்கம்

A1 அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய 20 வங்கிக் கணக்குகள் மற்றும் A2 முத்துக்குமாருடன் தொடர்புடைய 29 வங்கிக் கணக்குகளில் நிதிப் பரிவர்த்தனைகள் அதன் தொடர்பான சரிபார்ப்பு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்..

இவர்களது குடியிருப்புகள், அலுவலகங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அமைந்துள்ள DPI வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல கட்டங்களாக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

அன்பில் மகேஷ் மீது வழக்கு

விசாரணையின் தொடர்ச்சியாக, சாட்சிகளின் வாக்கு மூலங்கள். ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் மற்றும் அரசு ஆவணங்களின் அடிப்படையில், அப்போதைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி...

ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, இவர் மீது ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆறு இடங்களில் சோதனை

அதோடு, அவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் திருச்சியிலுள்ள மொத்தம் 4 இடங்களிலும், இவரது உதவியாளரான வாலாடி கார்த்திக் என்பவருக்கு சொந்தமான சென்னை மற்றும் திருச்சி 2 இடங்களிலும் இன்று (16.09.2026) காலை முதல் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

==========

logo
Thamizh Alai
www.thamizhalai.in