

தவெக நிர்வாகிகள் சந்திப்பு
கரூர் அசம்பாவிதத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய், தனது மக்கள் சந்திப்பை நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றி ஒவ்வொரு கூட்டத்திற்கு 5,000 நிர்வாகிகளை மாவட்டம் வாரியாக நடத்தி வருகிறார்.
மக்களுக்கு வாக்குறுதி
அந்தவகையில், கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியில் நிர்வாகிகள் சந்திப்பை விஜய் மேற்கொண்டார். நேரில் வந்து உங்களை சந்திக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.
விஜய் கடும் விமர்சனம்
ஒரு எதிர்க்கட்சியாக இருந்து கேள்வி கேட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், நமக்கு எதிராக என்ன சூழ்ச்சி நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.
ஆகவே, நம் ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக வந்து என் சொந்தங்களாகிய உங்களை சந்திக்கிறேன் என்று விஜய் பேசினார். திமுக அரசையும் கடுமையாக சாடி இருந்தார்.
தஞ்சையில் 4ம் தேதி கூட்டம்
இந்நிலையில், வேலூர் கூட்டத்தைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் வரும் 4ஆம் தேதி நிர்வாகிகள் சந்திப்புக்கு காவல்துறையிடம் தவெக தரப்பில் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்றுள்ள காவல்துறை, தஞ்சை, செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
5,000 பேர் பங்கேற்கும் கூட்டம்
அதன்படி 5,000 பேர் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. க்யூ ஆர் கோடு மூலம் நிர்வாகிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால், காங்கிரஸ் திமுக கூட்டணியில் நீடிக்குமா? அல்லது வெளியேறுமா என்பது நாளை தெரிந்து விடும்.
கூட்டணியை விட்டு வெளியேறினால், தவெக கூட்டணிக்கு தான் காங்கிரஸ் வரும். அப்படி நடந்தால், தஞ்சை தவெக நிர்வாகிகள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்ற இருக்கும் விஜய் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது. மனைவி சங்கீதா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருப்பதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் பேசுவார் என்றும் தெரிகிறது. எனவே, தஞ்சை தவெக நிர்வாகிகள் கூட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
====