

தமிழக சட்டமன்ற தேர்தல்
Anbumani’s PMK joins AIADMK alliance ahead of 2026 Tamil Nadu Assembly elections : 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே இருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் நாளுக்குநாள் விறுவிறுப்படைந்து வருகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, மக்கள் சந்திப்புகள் மூலம் அவருக்கு கிடைக்கும் ஆதரவு, கூட்டணி கணக்குகளை புரட்டி போடும் என்று தெரிகிறது.
திமுக, அதிமுக, தவெக - ஆட்சி யாருக்கு?
திமுகவுக்கு வெற்றி அவ்வளவு சுலபமில்லை. அதிமுக ஆட்சியை பிடிப்பதும் அவ்வளவு எளிது கிடையாது. வலுவான கூட்டணி இல்லா விட்டால், விஜய் அதிமுக, திமுகவை வெற்றியை பறிப்பார் என்பதே இன்றைய நிலை.
அதிமுக கூட்டணியில் பாமக
அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி அதிகாரப்பூர்வமாக அங்கம் வகிக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவும் இணைந்துள்ளது.
சென்னையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியினர் சந்தித்து கூட்டணியில் இணைந்தனர்.
இதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும், அன்புமணியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
இயற்கையான கூட்டணி - எடப்பாடி
“வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலில், ஏற்கனவே அதிமுகவும், பாஜகவும் கூட்டணியை அமைத்துள்ளது. தற்போது எங்கள் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.
மேலும் சில கட்சிகளும் வரும்
மேலும் சில கட்சிகள் விரைவில் எங்கள் கூட்டணியில் சேர்க்கப்படும் சேருவார்கள். எங்களுடைய கூட்டணி இயற்கையான கூட்டணி. அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் விரும்பிய வண்ணம் இந்தக் கூட்டணியை நாங்கள் அமைத்திருக்கிறோம்.
அதிமுக கூட்டணி - வெற்றிக் கூட்டணி
அதேபோல பாமகவிலும் அவர்களுடைய நிர்வாகிகள், தொண்டர்கள், தலைவர்கள் விரும்பியவாறு இந்த கூட்டணியை அமைத்திருக்கிறோம். எங்களுடைய கூட்டணி வெற்றி கூட்டணி” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
திமுகவை அகற்றுவோம்
நடைபெறவுள்ள சட்டமன்ற பொது தேர்தலில் மக்கள் விரோத திமுகவின் ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற ஒரு லட்சியத்தின் அடிப்படையிலே, ஒரு வலிமையான தமிழகத்தை உருவாக்க, மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுக்கின்ற ஒரு அரசாக அமைய, எங்களுடைய கூட்டணி 234 இடங்களில் போட்டியிட்டு, பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக தனி பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும்.
தேனீக்கள் போல உழைப்போம்
அதற்கு எங்கள் கூட்டணி இடம்பெற்றுள்ள அதிமுக, பாஜக, பாமக மூன்றும் இணைந்து, இரவு பகல் பாராமல், தேனீக்கள் போன்று போன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு, மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
வலுவான கூட்டணி - அன்புமணி
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி கூறியதாவது, “ அதிமுக தலைமையிலான கூட்டணியில் வரும் சட்டசபை தேர்தலை சந்திக்க இணைந்து இருக்கிறது, எங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியான தருணம். எங்கள் தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் நாங்கள் சேர்ந்து இருக்கிறோம். வலுவான கூட்டணி.
திமுக - மக்கள் விரோத ஆட்சி
எங்களது நோக்கம் மக்கள் விரோத திமுக ஆட்சி, ஊழல் செய்கிற திமுக ஆட்சி, பெண்களுக்கு எதிரான திமுக ஆட்சி, சமூக நீதிக்கு எதிரான திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பார்த்து இருக்கிறோம்.
திமுக மீது மக்கள் கோபம்
சமீபத்தில் 100 நாட்கள் நடைபயணம் மேற்கொண்ட போது கிராமங்களில் மக்கள் திமுக மீது மிகுந்த கோபத்தில் இருப்பதை பார்த்தோம். ஆத்திரத்தில் இருக்கிறார்கள். தேர்தல் எப்போது வரும் என்று காத்து கொண்டு இருக்கிறார்கள். உறுதியாக எங்களது கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று, தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைக்கும்” என்று அன்புமணி கூறினார்.
======================