நிவாரண அறிவிப்புடன் தலைவர்களின் இரங்கல்! யார் யார் எவ்வளவு?

Karur Stampede Death in Vijay Rally: கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்.
Political Leaders Condolence And Relief Announced To Karur Stampede Death in Vijay Campaign
Political Leaders Condolence And Relief Announced To Karur Stampede Death in Vijay Campaign
2 min read

Karur Stampede Death in Vijay Rally : தமிழக வெற்றி கழக பிரச்சார கூட்டம் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் முதலாவதாக திருச்சியில் தொடங்கிய பரப்புரை, கரூர் பிரச்சார கூட்டம் வரை தொடர்ந்து நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில், 27 செப்டம்பர் அன்று விஜய் பிரச்சார உரையுடன் தொடங்கிய கரூர் பிரச்சார கூட்டத்தில், பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கினர். இதில், 39 பேர் உயிரிழந்ததை அடுத்து, பலரும் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திரௌபதி முர்மு இரங்கல் :

இந்நிலையில், இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் நேரிலும் சமூக வலைதளங்களின் வழியாகவும் இரங்கல் தெரிவித்தும் துயர நிதியும் வழங்கி வருகின்றனர். இதில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த துயரச் செய்தி அறிந்து வேதனை(Droupadi Murmu on Karur Death) அடைந்ததாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

கரூரில் நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாகவும் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும்(CP Radhakrishnan on Karur Death), இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற இறைவனை வேண்டுவதாகவும் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி இரங்கலுடன் நிதியுதவி

கரூர் உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி,அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருடன் தனது எண்ணங்கள் உள்ளதாகவும்,காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும்(PM Modi on Karur Death), உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் அறிவித்து வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி :

இந்த துயரமான நேரத்தில், உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்வதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினா் நாகேந்திரன் :

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சகோதர, சகோதரிகள் பூரண நலத்துடன் திரும்ப இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும், அத்துடன் 2 நாட்களுக்கு பாஜக சார்பில் திட்டமிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூரில் இருந்து வரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிப்பதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

பாஜக தேசிய பொதுகுழு உறுப்பினர் அண்ணாமலை

தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ள அண்ணாமலை, கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்,விஜயின் கூட்டத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாக தகவல் வருவதாகவும் கூறியுள்ளார்.இத்தனை கவனக்குறைவாக தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது எனவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு மாவட்டத்தின் மொத்த போலீசாரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் அரசு எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகி உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக பொதுசெயலாளர் எடப்படாடி பழனிச்சாமி :

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை மருத்துவமனைக்கு சென்று உதவிகளை செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, த.வெ.க. பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தவர்களுக்கு தமிழக அரசு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க : Karur : கரூரில் நடந்த துயரம்..! உண்மையில் பலி எண்ணிக்கை எத்தனை?

தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் :

இந்த உயிரிழப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை என்று பதிவிட்ட அவர், நேரில் சென்று வருத்தம் தெரிவித்ததையடுத்து, தமிழக அரசு சாார்பாக இறந்தவர்களுக்கு தலா 10 லட்சம் வழங்கபடும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in