என்டிஏ கூட்டணி-டிடிவி தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்!

TTV Dhinakaran Joins NDA Alliance: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுசேர்க்கும் விதமாக இணைந்துள்ள அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரனுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Political party leaders congratulated TTV Dhinakaran for joining NDA alliance in Tamil Nadu
Political party leaders congratulated TTV Dhinakaran for joining NDA alliance in Tamil NaduGOOGLE
1 min read

எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

TTV Dhinakaran Joins NDA Alliance in Tamil Nadu : தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும்,மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட,தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு. @TTVDhinakaran அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம்,தமிழகத்தை மீட்போம் என்று பதிவிட்டுள்ளார்.

எல்.முருகன் வாழ்த்து

நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக, அண்ணன் திரு. @TTVDhinakaran அவர்கள் தனது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியினை, மாண்புமிகு மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான திரு.@PiyushGoyalஜி அவர்களின் முன்னிலையில் NDA கூட்டணியில் இணைத்துக் கொண்டார் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக மக்களின் நலனுக்கெதிரான போக்கை கடைபிடித்து வரும் திமுக-வை, வருகின்ற 2026 சட்டசபை தேர்தலில் வீழ்த்தவிருக்கும் நமது கூட்டணிக்கு, தனது பங்களிப்பை வழங்கியிருக்கும் அண்ணன் திரு. டிடிவி தினகரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்நிகழ்வில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணன் திரு. @NainarBJPஅவர்கள், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. @VanathiBJP அவர்கள், குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். ஆர். காந்தி அவர்கள், தமிழக பாஜக முக்கிய நிர்வாகிகள் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் நன்றி

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து மேலும், கூட்டணிக்கு வலு சேர்க்கும் விதமாக தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரகரன் இணைந்ததற்கு, இந்திய கூட்டணி தலைவர்கள் முதல் கூட்டண உறுப்பினர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் வரிசையில், எல்முருகன், எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்கு , நன்றி தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், எல் முருகன் வாழ்த்துக்கு தங்களது வாழ்த்துகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கு மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in