”அரசியல் துறவறம் அறிவித்தார் ராமதாஸ்” : இனி அரசியல் விவகாரங்களில் தலையிட மாட்டேன் என் உருக்கம்...!

இன்று முதல் நான் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன் என்றும் , என்னைப் பார்க்க வருபவர்கள் நலம் விசாரித்தால் போதும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்
Political Renunciation: PMK Founder Ramadoss Announces
Political Renunciation: PMK Founder Ramadoss Announcesgoogle
1 min read

ரசியல் ஒய்வை அறிவித்தார் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். "இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்; பாமக விவகாரங்களில் இன்று முதல் தலையிட மாட்டேன்; என்னைப் பார்க்க வருபவர்கள் நலம் விசாரித்தால் போதும் என்றும் தெரிவித்துள்ளார்

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு மூலாக அரசியல் பயணத்தை தொடங்கியவர்

மருத்துவர் ராமதாஸ் தனது அரசியல் பயணத்தை வன்னியர் சங்கத்தின் இடஒதுக்கீட்டுப் போராட்டங்கள் மூலம் தொடங்கி, ஜூலை1989 அன்று பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கம்

வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி - வேலைவாய்ப்பில் `தனி இட ஒதுக்கீடு’ , 1980-ம் ஆண்டு ஈரோடு இட ஒதுக்கீடு கோரி முதல் மாநாடு என வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டிற்காக குரல் கொடுத்தவர் இன்று அரசியல் துறவறம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்

தேர்தலில் போட்டியிடாமல் அரசியல் ஓய்வை அறிவித்த ராமதாஸ்

தேர்தலைப் புறக்கணித்து அரசியல் சார்பற்ற இயக்கமாக இருந்த வன்னியர் சங்கம், ஜூலை 16, 1989-ம் ஆண்டு `பாட்டாளி மக்கள் கட்சியாகப் உருமாற்றம் பெற்றது .

புதிதாகக் கட்சி ஆரம்பித்தவுடன் ராமதாஸ், நான் வாழ்நாளில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று கூறி தன் வாழ்நாளில் தேர்தலில் போட்டியிடாமல் தற்போது அரசியல் பயணத்தை நிறைவுசெய்துள்ளார்

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டிற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து , 20% ஒதுக்கீடை பெற்றுத் தந்தார்

கனல் என்ற இதழை நடத்திய ராமதாஸ் , தொடர்ச்சியாக எழுதினார் , இதன் மூலம் அரசியல், பொருளாதாரம், வர்க்கம் என திசைக்கொரு புறமாகப் பிரிந்து கிடந்த வன்னியர் சமுதாய மக்களில் பெரும்பாலானவர்களை ஒன்று திரட்டினார்.

இவரின் தொடர் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தின் மூலமாக 1989-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று முதல்வரான கருணாநிதி, வன்னியர் சமுதாயத்துடன் சேர்த்து 108 சமுதாயங்களை `மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ (MBC) என்ற புதிய பட்டியலில் இணைத்து 20% இட ஒதுக்கீட்டை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது

இனி அன்புமணி பாமகவை நிர்வகிப்பார்

கடந்த சில நாட்களாக மகன் அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கானது நிலவி வண்டஹ் நிலையில் , இருவரின் சந்திபிற்கு பிறகு மோதலானது முடிவை எட்டியது ,இஅந்த நிலையில் தந்தைக்கும் மகனுக்கும் நிலவி வந்த மோதல் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்

இந்சச் சூழலில் ராமதாஸ் அரசியல் ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், பாமக வை இனி அன்புமணி நிர்வகிப்பார். இனி எல்லாத்தையும் அன்பமணி பார்த்துக் கொள்வார் என்று சூசகமாக ராமதாசும் தெரிவித்து இருக்கிறார்.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in