

தமிழக சட்டமன்ற தேர்தல்
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டமன்றத்திற்கு வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
தபால் வாக்குப்பதிவு
இந்தநிலையில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விண்ணபித்தவர்களிடம் வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரில் சென்று வாக்குகளைப் பெறுகின்றனர்.
தபால் வாக்குகளை செலுத்தும் பணி தொடங்கி இருக்கிறது. வாக்குச்சாவடி அலுவலர்களோடு, காவல்துறையினர் பாதுகாப்பாக செல்கின்றனர். வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் பெறப்படுகின்றன.
சிறப்புத் தபால் வாக்குப்பதிவு மூன்று நாட்களுக்கு நடைபெறும்.
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள்
85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் (PwD) மற்றும் அத்தியாவசியப் பணிகளில் உள்ளவர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.
தகுதியுள்ள வாக்காளர்கள் படிவம் 12D மூலம் விண்ணப்பித்து, தேர்தல் ஆணையத்தின் மூலம் வீட்டிலிருந்தே அல்லது பிரத்யேக மையங்களில் (PVC) வாக்களிக்கலாம்.
ஏப்ரல் 18, 20 தேதிகளில் காவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலர்கள், காவலர் மற்றும் வீடியோகிராபர் குழுவினர் வீடு தேடி வந்து தபால் வாக்குகளைச் சேகரிக்கின்றனர்.
வீடியோ பதிவோடு தபால் வாக்குகள்
வாக்களித்த தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளுக்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த செயல்முறை, அந்தந்த வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், ரகசியத்தன்மை காக்கப்பட்டு, வீடியோ பதிவுடன் (Videography) நடைபெறுகிறது.
மே 4ல் வாக்கு எண்ணிக்கை
மே 4ம் தேதி EVM இயந்திரங்களில் வாக்குகள் எண்ணப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அந்த எண்ணிக்கை, மொத்த வாக்குகளோடு சேர்க்கப்படும்.
===