தபால் வாக்குப்பதிவு விறுவிறுப்பு : 1.41 லட்சம் முதியோர், மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பு!

தமிழகம் முழுவதும் தபால் வாக்குப்பதிவிற்காக சுமார் 1.91 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
1.41 Lakh Elderly and Differently-abled Persons Cast Postal Votes!
1.41 Lakh Elderly and Differently-abled Persons Cast Postal Votes!source: google
1 min read

1.41 Lakh Elderly and Differently-abled Persons Cast Postal Votes!

சட்டமன்ற தேர்தல் 2026:

தமிழகம் முழுவதும் 85 வயதிற்கு மேற்பட்ட 1.41 லட்சம் முதியோர், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தபால் வாக்குப்பதிவு:

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசு ஊழியர்கள், 85 வயதைக் கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் முறையில் வாக்களிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காகத் தமிழகம் முழுவதும் சுமார் 1.91 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

வீடு தேடி வரும் தேர்தல் அதிகாரிகள்

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, தேர்தல் அதிகாரிகள் நேரடியாக அவர்கள் இல்லங்களுக்கே சென்று தபால் வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர்.

1.41 லட்சம் வாக்குகள்

இதுவரை நாடு முழுவதும் 1.41 லட்சம் பேரிடம் இல்லங்களிலேயே வாக்குகள் பெறப்பட்டுள்ளன.

இதில் 89 ஆயிரம் பேர் 85 வயதைக் கடந்த முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்பணி தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னையில் சிறப்பு ஏற்பாடுகள்

சென்னையைப் பொறுத்தவரை, 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து 8,947 முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்.

96 சிறப்பு குழுக்கள்

இவர்களது வாக்குகளைச் சேகரிக்க 96 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இந்த தபால் வாக்குச் சேகரிப்புப் பணி ஏப்ரல் 18-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்கள் மற்றும் வாக்காளர் சீட்டு

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்ட அளவிலான பயிற்சி மையங்களிலேயே தபால் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.

வாக்காளர் தகவல் சீட்டு

மேலும், பொதுமக்களுக்கான வாக்காளர் தகவல் சீட்டுகள் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஒருவேளை தகவல் சீட்டு கிடைக்காதவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

EPIC Number

தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சென்று (voters.eci.gov.in) , வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணை (EPIC Number) உள்ளீடு செய்ய வேண்டும்.

இதன் மூலம் உங்களது பாகம் எண் , வரிசை எண் மற்றும் வாக்குச்சாவடி குறித்த விவரங்களை எளிதாக அறிந்து கொள்ளலாம்.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in