’மகளிர் உரிமைத் தொகை மட்டும் வெற்றி தராது’ : பிரவீன் சக்ரவர்த்தி

Praveen Chakravarthy on Magalir Urimai Thogai 5000 : மகளிர் உரிமைத்தொகை வெற்றியை தரும் என்று எதிர்பார்ப்பதும், மூட நம்பிக்கை தான் என்று, திமுகவை கடுப்பேற்றி வருகிறார் பிரவீன் சக்ரவர்த்தி.
Praveen Chakravarthy is criticizing the DMK, saying that expecting women's rights will bring victory is superstition.
Praveen Chakravarthy is criticizing the DMK, saying that expecting women's rights will bring victory is superstition.google
2 min read

ஆட்சியில் பங்கு - காங். குடைச்சல்

Praveen Chakravarthy Reaction on Magalir Urimai Thogai 5000 : திமுக கூட்டணியில் அதிகாரத்தில் பங்கு கூடுதல் இடங்கள் என்று காங்கிரஸ் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதுபற்றி திருச்சி வேலுச்சாமி, எம்பி மாணிக்கம் தாகூர், ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து இருக்கின்றன.

கொந்தளிப்பில் திமுக

இதற்கு திமுக அமைச்சர்கள் சிலர் எதிர்வினை ஆற்றினாலும், கட்சி தலைமை மவுனம் காப்பதால், திமுக தலைவர்கள் கொந்தளித்து போயிருக்கிறார்கள். வெளிப்படையாக எதிர்ப்பவர்களை அடைக்க வைக்க தயக்கம் காட்டும் ராகுல் காந்தி, அவர்களை பின்னணியில் இருந்து இயக்குகிறார் என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.

பிரவீன் சக்ரவர்த்தி எதிர்ப்பு

மற்ற மாநிலங்களில் கூட்டணி ஆட்சி சிறப்பாக இருக்கும் போது, தமிழகத்தில் மட்டும் ஒத்து வராது என்று முதல்வர் ஸ்டாலினை கூறுவது, பிரவீன் சக்ரவர்த்தி ஏற்க மறுக்கிறார். தேவையற்ற மாயை திமுக ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் விமர்சித்து வருகிறார்.

மகளிருக்கு ரூ. 5000

இந்தநிலையில், தமிழகத்தில் கடந்த மாதம் மகளிர் உரிமைத்தொகையாக ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத்தொகையாக 3 ஆயிரம் வழங்கப்பட்டது.

30 நாட்கள் முடிவதற்குள், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை 3 ஆயிரம் மற்றும் இதுவரை இல்லாத புதிய அறிவிப்பாக கோடை காலத்திற்காக 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு தொகுப்பு அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்.

9 ஆயிரம் கோடி நிதியுதவி, 10,000 கோடி செலவு

அதன்படி, ஒரு கோடியே 31 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன்படி, பார்த்தால் பீகாரில் மகளிருக்கு தலா 10,000 ரூபாய் வழங்கப்பட்டது.

இதை இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து இருந்தன. அதற்கு ஈடாக தமிழகத்தில் ஒருமாத காலத்திற்குள் 9 ஆயிரம் ரூபாய் மகளிருக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் 10 ஆயிரம் கோடிக்கு மேல் அரசு செலவழித்து இருக்கிறது.

மகளிர் உரிமைத்தொகை - பிரவீன் சக்ரவர்த்தி

இந்நிலையில், பிரவீன் சக்ரவர்த்தி தனது 'எக்ஸ்' பக்கத்தில், "மகளிர் உரிமைத் தொகை ஒரு சிறந்த நலத்திட்டம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை; அதைச் செயல்படுத்தியது பாராட்டத்தக்கது. ஆனால், இந்த ஒரு திட்டம் மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது வெறும் மூடநம்பிக்கை.

வெற்றியை ஈட்ட வியூகம் முக்கியம்

கடந்த 3 ஆண்டுகளில், தேர்தலுக்கு முன்னதாக இது போன்ற திட்டங்களை அறிவித்த 9 பெரிய மாநிலங்களில், 4 மாநில அரசுகள் மட்டுமே மீண்டும் வெற்றி பெற்றுள்ளன" எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் திமுக கூட்டணியில் மீண்டும் ஒரு குண்டை வீசி புயலை கிளப்பி இருக்கிறார்.

கடும் அதிருப்தியில் அறிவாலயம்

மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு பெரிய வெற்றியை ஈட்டித் தரும் என்று திமுகவினர் மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கும் நிலையில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் அதை மூட நம்பிக்கை என்ற பெயரில் விமர்சிப்பது அறிவாயல நிர்வாகிகளை கடுப்பேற்றி வருகிறது.

=================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in