நிர்வாகிகள் எந்த கட்சிக்கும் அடிபணியக் கூடாது: பிரவீன் சக்ரவர்த்தி
பிரவீன் சக்ரவர்த்தி
Praveen Chakravarty on Congress New District Secretary in Tamil Nadu : இந்திய தேசிய காங்கிரசில் ராகுல் காந்திக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர் பிரவீன் சக்ரவர்த்தி. இவர் தமிழக வெற்றிக் கழகத்தை பற்றியும், அக்கட்சி தலைவர் விஜய் குறித்தும் பேசியவை தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தின. குறிப்பாக திமுக – காங்கிரஸ் கூட்டணியை அசைத்தும் பார்த்தது. இந்தநிலையில், கட்சி மேலிடம் தலையிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
71 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள்
தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, தமிழகத்தில் மாவட்ட வாரியாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 71 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய தலைவர்களுக்கு வாழ்த்து
புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து, தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரவீன் சக்ரவர்த்தி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கும் வாழ்த்துகள் மற்ற எந்தக் கட்சிக்கும் அடிபணியாமல் செயலாற்ற வேண்டும்.
சுயமரியாதை, கட்சியை வலுப்படுத்தல்
சுயமரியாதை மற்றும் தன்னாபிமானத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக நீங்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் காங்கிரஸின் உண்மையான அடிமட்ட பலத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமையாகும் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் சலசலப்பு
பிரவீன் சக்ரவர்த்தியின் இந்தப் பதிவு, காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை உருவாக்கி உள்ளது. அதாவது, எந்தக் கட்சிக்கும் அடிபணியாமல் செயலாற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு இருப்பது திமுகவை தான் என்ற கருத்து எழுந்துள்ளது.
கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை இன்னும் தனது இறுதி நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருப்பது, திமுகவை எரிச்சலடைய வைத்துள்ளது.

