

தேமுதிக 0.45% வாக்கு வங்கி
Premalatha Vijayakanth about DMDK DMK Alliance 2026 : தமிழக அரசியல் கட்சிகளில் 0.45 சதவீதமே வாக்கு வாங்கி வைத்திருப்பது தேமுதிக. விஜயகாந்த் மறைவுக்கு பின்பு அனுதாப அலை வீசக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
யாருடன் கூட்டணி? சஸ்பென்ஸ்
இந்நிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்பேன் என தெரிவித்த பிரேமலதா விஜயகாந்த் அந்த மாநாட்டில் ‘‘கூட்டணி பற்றி முடிவு எடுத்துட்டேன். ஆனால், இப்போது அறிவிக்கவில்லை’’ என்று தெரிவித்தார். .
நாலாபுறமும் கூட்டணி பேச்சு
கட்சிகள் யாரும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. தேர்தல் தேதியும் அறிவிக்கவில்லை. தக்க சமயத்தில் நான் கூட்டணி குறித்து அறிவிப்பேன் சூசகமாகவே பேசி வருகிறார் பிரேமலதா. இறுதிக்கட்டமாக பாஜக கூட்டணியில் இணைவதற்கு பியூஸ் கோயலும், திமுக கூட்டணியில் இணைவதற்கு அமைச்சர் எ.வ.வேலுவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
திமுகவுடன் தேமுதிக பேச்சு
முதல் கட்டமாக திமுகவுடன் பேச்சுவார்த்த தொடங்கி இருக்கிறார். திமுக தரப்பில் மதிமுக 12 தொகுதிகள் கேட்டு அடம்பிடிக்கிறது. எனவே. மதிமுக கூட்டணியில் சேரவில்லை என்றால் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கலாம் என அறிவாலயம் தரப்பில் யோசிக்கப்பட்டு வருகிறது.
பேரம் பேசும் தேமுதிக
அதேசமயம் தேமுதகவை சேர்ப்பதால் திமுகவிற்கு என்ன லாபம் என்ற கணக்கும் முன்வைக்கப்படுகிறது. பிரேமலதா தரப்பில் 20 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட், தேர்தல் நிதி என பட்டியல் நீள்கிறது.
அதிமுகவிடமும் பேச்சு
ஆனால் திமுக தரப்பில், 6 தொகுதிகள், தேர்தல் நிதி மட்டுமே கொடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே, அதிமுகவிடமும் பிரேமலதாக பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. ஆனால், பிரேமலதா வைக்கும் டிமாண்டை ஏற்க அதிமுக தயாராக இல்லை என்று கைவிரித்து விட்டதாக தெரிகிறது.
பிப்ரவரி இறுதியில் தேர்தல் தேதி
பிப்ரவரி முதல் வாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் குழு தமிழகம் வந்து தேர்தல் ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்கிறது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும்.
எனவே, ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிரேமலதா விஜயகாந்த் தள்ளப்பட்டுள்ளார். இதற்கு இடையே டெல்லியில் இருந்து அமித் ஷா தரப்பில் பிரேமலதா விஜயகாந்திடம் பேசப்பட்டு இருக்கிறது. ஆனாலும் திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் பிரேமலதா.
தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் தான்
கூட்டணி பேச்சுவார்த்தையில் தற்போது 4 சட்டமன்ற தொகுதிகள் மட்டுமே தேமுகி ஒதுக்கப்படும் என திமுக தலைமை கூறியதாகவும், 12 தொகுதிகளையாவது கொடுங்கள் என தற்போது தேமுதிக இறங்கி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் 4-லிருந்து 5 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முடியும் என திமுக உறுதியாக கூறிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கதவை சாத்துகிறார் எடப்பாடி
இருபுறமும் பேரம் பேசியதால் அதிருப்தியான எடப்பாடி பழனிசாமி இனி பிரேமலதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை வேண்டாம் என முடிவிடுத்து விட்டார். என்கிறார்கள். எனவே, திமுகவை தவிர இப்போது பிரேமலதாவுக்கு வேறு சாய்ஸ் இல்லை.
திமுக கூட்டணியில் தேமுதிக?
ஆகையால் திமுக கொடுக்கும் 4 சீட்டுகளுக்கு ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் தேமுதிக நிர்வாகிகள். நாலாபுறமும் பேச்சுவார்த்தை, அதிக எதிர்பார்ப்புகள் மூலம் கட்சியின் பெயரையும், நம்பகத் தன்மையையும் பிரேமலதா சிதைத்து விட்டார் என்று புலம்புகின்றனர் தேமுதிகவினர்.
=========================