காவல்துறையில் சிறப்பான பணி: தமிழக அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்

TN Police Officers President's Police Medal 2025 : சிறப்பாக பணியாற்றியதற்காக, தமிழக போலீஸ் அதிகாரிகள் மூன்று பேருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
TN Police Officers President's Police Medal 2025
TN Police Officers President's Police Medal 2025
1 min read

ஜனாதிபதி பதக்கம் :

TN Police Officers President's Police Medal 2025 : சுதந்திர தினம் முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள், காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அதிகாரிகளுக்கு பதக்கம் :

தமிழக காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக, ஏடிஜிபி. பாலநாகதேவி, ஐஜி.க்கள் கார்த்திகேயன், லஷ்மி ஆகியோருக்கு இந்த ஆண்டு ஜனாதிபதி பதக்கம்(President Police Medal 2025) அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களை தவிர, மெச்சத்தக்க பணிக்கான மத்திய அரசின் பதக்கம் பெறும் தமிழக போலீஸ் அதிகாரிகளின் பட்டியல் வருமாறு:

போலீஸ் அதிகாரிகள் பட்டியல் :

எஸ்.பி., ஜெயலட்சுமி, துணை ஆணையர் சக்திவேல், எஸ்பி. விமலா, டிஎஸ்பி. துரைபாண்டியன், ஏடிஎஸ்பி. கோபாலசந்திரன், ஏடிஎஸ்பி. சுதாகர் தேவசகாயம், டிஎஸ்பி. சந்திரசேகர், உதவி ஆணையர் கிறிஸ்டின் ஆகியோருக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது.

இதேபோன்று, ஜெயசில், உதவி ஆணையர் முருகராஜ், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், டிஎஸ்பி. வேல்முருகன், இன்ஸ்பெக்டர் அதிசயராஜ், இன்ஸ்பெக்டர் எம்.ரஜினிகாந்த், இன்ஸ்பெக்டர் பி.ரஜினிகாந்த், எஸ்ஐ ஸ்ரீவித்யா, எஸ்ஐ ஆனந்தன், எஸ்ஐ கண்ணுசாமி ஆகியோர் மெச்சத்தக்க பணிக்கான பதக்கத்தை பெறுகிறார்கள்.

மேலும் படிக்க : திரைப்பட விருது:சிறந்த நடிகர் ஷாருக், துணை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

மற்ற துறைகளில் பதக்கம் பெறும் தமிழக காவல்துறை :

தீயணைப்பு துறை -

மாணிக்கம் மகாலிங்கம் மூர்த்தி, மாவட்ட அதிகாரி, பாலகிருஷ்ணன் சரணவ பாபு, துணை இயக்குநர்

ஊர்க்காவல் படை -

கம்பெனி கமாண்டர் ரவி, டிவிஷனல் கமாண்டர் முத்துக்கிருஷ்ணன்

சிறைத்துறை -

வேலூர் டிஐஜி, சண்முகசுந்தரம், உதவி ஜெயிலர், வேலுச்சாமி ஆறுமுக பெருமாள், வார்டர் ஜோசப் தலியத் பெஞ்சமின் ஜோசப் பாண்டியன்

---------

Check Here Full List : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2156243

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in