

ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை
சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
காலையில் குறைந்து மாலையில் உயர்வு
ஈரான் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை தங்கம் விலை சற்று குறைந்தது. ஆனால் மாலையில்
திடீரென உயர்ந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,770க்கும், பவுனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 160க்கும் விற்பனையானது.
புதன்கிழமை விலை அதிகரிப்பு
இந்நிலையில் நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.380 உயர்ந்து , ஒரு கிராம் ரூ.14,050க்கும், பவுனுக்கு ரூ.3040 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12,400க்கும் விற்பனையானது.
இதே போல நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.265க்கு, கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.65 லட்சத்துக்கும் விற்பனையானது.
காலையில் குறைந்த தங்கம், வெள்ளி
இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,11,600க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,950க்கும், வெள்ளி விலை கிராம் ரூ.10 குறைந்து ரூ.255க்கும் விற்பனையானது.
மாலையில் சரிந்த தங்கம் விலை
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.2,400 குறைந்தது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.800 குறைந்திருந்த நிலையில், தற்போது ரூ.1,600 குறைந்து ரூ.1,10,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை மாற்றமில்லை
கிராமுக்கு ஒரே நாளில் ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.13,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை காலையில் குறைந்த நிலையில், மாலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை ஆகிறது.
===============