

ஏற்ற, இறக்கத்தில் தங்கம்
Today Gold Silver Rate Update in Chennai : சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆபரண தங்கம் கிராம், 11,270 ரூபாய்க்கும், சவரன், 90,160 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 165 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று முன்தினம் ( அதாவது சனிக்கிழமை ) தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் உயர்ந்து, 11,300 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் அதிகரித்து, 90,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மாற்றமில்லை.
தங்கம் விலை அதிகரிப்பு
இந்தநிலையில், சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,410க்கு விற்பனை ஆகிறது. ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வை கண்டு இருக்கிறது.
வெள்ளி விலையும் அதிகரிப்பு
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ஒரு கிராம் ரூ.167க்கு விற்பனை(Gold Rate Per Gram in Chennai) செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கடந்த 10 நாட்களில் தங்கம் விலையை பார்ப்போம், ( கிராம் விலை)
நவம்பர் 10, 2025 : 11,410
நவம்பர் 09, 2025 : 11,300
நவம்பர் 08, 2025 : 11,300
நவம்பர் 07, 2025 : 11,270
நவம்பர் 06, 2025 : 11,320
நவம்பர் 05, 2025 : 11,180
நவம்பர் 04, 2025 : 11,250
நவம்பர் 03, 2025 : 11,350
நவம்பர் 02, 2025 : 11,310
நவம்பர் 01, 2025 : 11,310
=============================