Gold Rate : தாறுமாறாக உயர்ந்த தங்கம் : புதிய உச்சம் தொட்ட வெள்ளி

Today Gold and Silver Rate in Chennai : தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டு, சாமான்ய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
Prices of gold and silver have reached new all-time highs, shocking the common man
Prices of gold and silver have reached new all-time highs, shocking the common man
1 min read

சேமிப்பின் அடையாளம் தங்கம்

Today Gold and Silver Rate in Chennai : சேமிப்பின் அடையாளமாக திகழ்ந்து வரும் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சாமானிய மக்கள் நகையே வாங்க முடியாத சூழல் இருக்கிறது. ஒரு சவரன் நகை வாங்க வேண்டும் என்றால். குறைந்தபட்சம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இல்லாமல் கடைக்கு செல்ல முடியாது.

உச்சம் நோக்கி தங்கம்

புத்தாண்டு பிறந்த முதல் நாள் மட்டும் தங்கம் விலை குறைந்த நிலையில், தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,280க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.106,240க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் சவரன் ரூ.1,07,600

அதன் தொடர்ச்சியாக வாரத்தின் முதல் நாளான இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து இருக்கிறது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,450க்கும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,07,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் சவரன் ரூ.89,840

18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,230க்கும் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 89,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த இரண்டு வர்த்தக நாட்களில் மட்டும் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 2,20 ரூபாயும், சவரனுக்கு 1,760 ரூபாயும் உயர்ந்திருக்கிறது.

புதிய உச்சத்தில் வெள்ளி

தlங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் நாளும் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அதன்படி, இன்று கிராமுக்கு ரூ.8 உயர்ந்து புதிய உச்சத்தை ஒரு கிராம் ரூ.318க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.8000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.3,18,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜனவரி ஒன்றாம் தேதி சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 256 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்றைய தினம் 318 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது 19 நாட்களில் வெள்ளியின் விலை கிராமுக்கு 62 ரூபாயும் கிலோவுக்கு 62,000 ரூபாயும் உயர்வு கண்டிருக்கிறது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in