

பிரதமர் மோடி திருச்சி வருகை
பிரதமா் மோடி அரசு நிகழ்ச்சி மற்றும் NDA கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மாலை திருச்சிக்கு வருகிறாா்.
மேலும் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும், கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார்.
தனி விமானத்தில் பயணம்
இதன் காரணமாக பிரதமர் மோடி, கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். பின்னர் விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் இடமான பஞ்சப்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறாா்.
ரூ.5,650 மேம்பாட்டு திட்டங்கள்
பின்னர் அரசு விழாவில் பங்கேற்று, பிரதமர், சுமாா் ரூ. 5,650 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்கலான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
புதிய ரயில் சேவை
அடுத்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும், ரயில்வே துறைகளின் சாா்பில் விரைவு ரயில் ,பயணிகள் ரயில் சேவையை கொடியசைத்தும் தொடங்கி வைக்கிறாா்.
கிராம் சதக் திட்டம்
தொடர்ந்து தமிழகத்தில் 370 கி.மீ. நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைக்கிறாா். இத்திட்டம் பிரதமரின் கிராம சதக் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை 81-இல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.
5 புதிய ரயில்கள்
பின்னர் , ரயில்வே துறைகளின் சாா்பில் இரண்டு அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், இரண்டு விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் சேவைகளையும் பிரதமா் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
NDA பொதுக்கூட்டத்தில் மோடி
தொடர்ந்து அப்பகுதியின் மறுபக்கத்தில் மாலை 6.30 மணியளவில் நடைபெறும் அமைக்கப்பட்டுள்ள NDA பொதுக்கூட்ட மேடையில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன், தமாகா தலைவா் ஜி.கே. வாசன், IKJ தலைவா் பாரிவேந்தா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.