தமிழகம் வழியே 3 அம்ரித் பாரத் ரயில்கள் : கொடியசைக்கிறார் பிரதமர்

தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
Prime Minister Narendra Modi inaugurate Amrit Bharat train service running through Tamil Nadu
Prime Minister Narendra Modi inaugurate Amrit Bharat train service running through Tamil Nadu
2 min read

அம்ரித் பாரத் ரயில்கள்

Prime Minister Narendra Modi launch three Arit Bharat Trains on Jan 23 in Tamil Nadu : நவீன வசதிகளுடன் கூடிய இந்த அம்ரித் பாரத் விரைவு ரயில், நீண்ட தூரப் பயணத்திற்கு ஏற்ற வகையிலும் நடைமுறைக்கு உகந்ததாகவும் பயணிகளுக்கு இனிமையான அனுபவத்தை வழங்கும் வகையிலும் அமைந்துள்ளது.

பொதுமக்களுக்கு வசதியான பயணம்

இந்த விரைவு ரயில் சேவை வசதியான பயண அனுபவத்தை அளிப்பதுடன் இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள பாரம்பரிய நகரங்கள், கோவில் நகரங்கள், கடற்கரைப் பகுதிகள், மலைப்பிரதேசங்கள் ஆகிய பகுதிகளில் மக்கள் சுற்றுலா செல்வதற்கும் உத்வேகம் அளிக்கிறது.

மாநிலங்கள் இடையே சுமூக போக்குவரத்து

வர்த்தக ரீதியிலான பயணத்தை எளிதாக்குவதுடன் மாநிலங்களுக்கு இடையேயான சுமூக போக்குவரத்திற்கும் உதவுகிறது. இது வர்த்தகம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்குப் புத்துயிர் அளிக்கிறது.

தமிழகம் வழியாக அம்ரித் பாரத்

அந்தவகையில் தமிழகத்திலும் இருந்து பிற மாநிலங்களுக்கு, பிற மாநிலங்களுக்கு தமிழகம் வழியாகவும் அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொது கூடுதலாக மூன்று ரயில்களின் சேவை தமிழகம் வழியாக செல்ல ரயில்வைத்துறை அனுமதி வழங்கியது.

திருவனந்தபுரம் - தாம்பரம்

திருவனந்தபுரம் - தாம்பரம் இடையேயான அம்ரித் பாரத் விரைவு ரயிலின் அறிமுகம், கேரளா - தமிழ்நாடு இடையே ரயில் போக்குவரத்து இணைப்பை வலுப்படும்.

கேரள தலைநகரை, தமிழ்நாட்டின் தலைநகரின் மிக முக்கிய புறநகர் மற்றும் போக்குவரத்து மையங்களில் ஒன்றான தாம்பரம் ரயில் நிலையத்துடன் இணைப்பதன் மூலம், இரு மாநிலங்களுக்கும் இடையேயான பயணத்தை எளிதாக்குவதுடன் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு நம்பகமான போக்குவரத்து வழித்தடமாக அமைகிறது.

பல்வேறு இடங்களில் வழியே செல்லும்

இந்த ரயில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய முக்கிய மாவட்டங்கள் வழியாக பயணித்து, கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தை அடைகிறது.

கலாச்சார ஒருங்கிணைப்பு

இந்த ரயில் சேவை தொழில், கல்வி, கலாச்சாரம் மற்றும் புனிதத் தலங்களை ஒன்றிணைக்கும் வகையில் அமைந்துள்ளது. மக்களுக்கு அத்தியாவசியமான ஒன்றாக அமைந்துள்ள இந்த விரைவு ரயில் சேவை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சரியான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பித்தக்கது.

வாரம் ஒருமுறை சேவை

தாம்பரத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் ரயில் மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடைய உள்ளது.

மறுமார்க்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 10.40 மணிக்கு புறப்படும் அம்ரித் பாரத் ரயில் அதே நாள் இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடைய உள்ளது.

திருவனந்தபுரம் - சார்லப்பள்ளி அம்ரித் பாரத்

இதேபோன்று திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா வழியாக தெலங்கானா மாநிலம் சார்லப்பள்ளிக்கு அம்ரித் பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.

நாகர்கோவில் - திருவனந்தபுரம் அம்ரித் பாரத்

நாகர்கோவிலில் இருந்து கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் வழியாக மங்களூருக்கு மற்றொரு அம்ரித் பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

இந்த மூன்று அம்ரித் பாரத் ரயில்களின் சேவையை நாளை பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவில் தொடங்கி வைக்க உள்ளார்.

அம்ரித் பாரத் ரயில்கள், பாரம்பரிய மெயில் மற்றும் விரைவு ரயில் சேவைகளை விட மேம்பட்ட வசதிகளுடன், குறைந்த கட்டணத்தில் பயண அனுபவத்தை வழங்கும் நோக்கில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

--------------------------

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in