விடைபெற்றார் ”மக்கள் தோழர் நல்லகண்ணு” ; 101 வயது வரை மக்கள் சேவை, சமூகப் போராளி நாயகர்!

CPI veteran Nallakannu Passes Away at Age Of 101 : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தகைசால் தமிழருமான ஆர். நல்லகண்ணு காலமானார். அவருக்கு வயது 101.
R. Nallakannu, a senior leader of the Communist Party of India and a staunch Tamil, has passed away. He was 101
R. Nallakannu, a senior leader of the Communist Party of India and a staunch Tamil, has passed away. He was 101google
1 min read

தோழர் ஆர். நல்லகண்ணு

CPI veteran Nallakannu Passes Away at Age Of 101 : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ம் ஆண்டு பிறந்தவர் நல்லகண்ணு. சிறுவயது முதலே மக்கள் நலனில், அவர்களினை பிரச்னைகளை களைவதில் தீவிரம் காட்டியது. இளம் வயதிலேயே விடுதலை போரில் பங்கு கொண்டவர் நல்லக்கண்ணு.

நல்லகண்ணு பங்கேற்ற போராட்டங்கள்

விடுதலைப் போராட்டம் தொடங்கி, விவசாயிகள் போராட்டம், தீண்டாமை எதிர்ப்பு, கனிமவள கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் என நல்லக்கண்ணு எதிர்கொள்ள போராட்டங்களை கணக்கெடுக்க முடியாது.

சமூக நீதி போராளியாக எப்போதும் குரல் கொடுத்து, களத்தில் தன்னை முன்னிறுத்திக் கொண்ட உண்மையான கம்யூனிஸ்ட் தான் நல்லக்கண்ணு

வாழ்நாள் முழுவதும் போராட்டங்கள்

மகாத்மா காந்தியின் அறைகூவலை ஏற்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றவர். தனது வாழ்நாளின் பெரும்பகுதியைப் போராட்டங்கள் மற்றும் சிறையில் கழித்தவர்.

மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களின் விவரத்தை தொகுத்து நூலாக வெளியிட்டவர்.

18 வயதில் கம்யூனிஸ்ட் கட்சி

18 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து ஏழை, தொழிலாளர்கள், விவசாயிகளின் உரிமைக்காக போராடியவர்.

1992 முதல் 2005 வரை 13 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக பொறுப்பு வகித்தவர்.

93 வயதிலும் போராட்டம்

25 ஆண்டுகாலம் விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவராக பணியாற்றியவர். தாமிரபரணியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை எதிர்த்து தனது 93வது வயதில் வழக்கு தொடுத்து அதற்கு எதிராக தடை பெற்றவர் நல்லக்கண்ணு.

கட்சிக்கு ஒரு கோடி கொடுத்த கொடையாளர்

தனது 80வது பிறந்தநாளில் கட்சி வசூலித்து கொடுத்த ரூ.1 கோடியை அதே மேடையில் கட்சிக்கே திருப்பி கொடுத்தவர்.

தகைசால் தமிழர் விருதுடன் அரசு வழங்கிய ரூ.10 லட்சத்துடன் ரூ.5,000-ஐ சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திருப்பி கொடுத்தவர்.

கடைசியில் இயற்கையோடும் போராடினார்

101 வயதான நல்லக்கண்ணுவுக்கு கடந்த 1ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

விடைபெற்றார் நல்லக்கண்ணு

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 1.55 மணிக்கு காலமானார். தனது மறைவிற்கு பிறகு உடலை அரசு மருத்துவமனைக்கு வழங்கி, மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது நல்லக்கண்ணுவின் விருப்பம். அதன்படி அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படும்.

தலைவர்கள் இரங்கல்

தோழர் ஆர். நல்லக்கண்ணுவின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து, அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in