சென்னையில் ராகுல் காந்தி, விஜய்யுடன் மதிய விருந்து : முக்கிய ஆலோசனை, மாலையில் இளைஞர்களுடன் சந்திப்பு!

ராகுல் காந்தி சென்னை வருகை; முதலமைச்சர் விஜய் இல்லத்தில் மதிய உணவு, மாலை 5 மணிக்கு இளைஞர்களுடன் சந்திப்பு, கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து எதிர்பார்ப்பு!
Rahul Gandhi is on Chennai meeting TN Chief minister vijay and participating in Youth programe meet
Rahul Gandhi is on Chennai meeting TN Chief minister vijay and participating in Youth programe meetGoogle
1 min read

ராகுல் காந்தி சென்னை வருகை.. விஜய்யுடன் மதிய உணவு:

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய்யை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் ஒரு உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டனர்.

தவெக–காங்கிரஸ் கூட்டணி அமைந்த பிறகு இரு தலைவர்களும் சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இடைத்தேர்தல் வெற்றிக்கு விஜய்க்கு வாழ்த்து:

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யைச் சந்திக்கும் ராகுல் காந்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மாலை 5 மணிக்கு இளைஞர்களைச் சந்திக்கும் ராகுல்:

மதிய உணவுக்குப் பிறகு, இன்று மாலை 5 மணிக்கு சென்னை தீவுத்திடலில் நடைபெறும் ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுடன் கல்வி, நீட் தேர்வு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர் கலந்துரையாட உள்ளார்.

கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசனையா?

விஜய்–ராகுல் காந்தி சந்திப்பில் தமிழக அரசியல் சூழல், தவெக–காங்கிரஸ் கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள், எதிர்காலத் தேர்தல் திட்டங்கள் மற்றும் கூட்டணியின் பொதுவான செயல்திட்டம் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், சந்திப்பில் பேசப்படும் அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

இன்று இரவே மீண்டும் டெல்லி திரும்பும் ராகுல்:

சென்னையில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, ராகுல் காந்தி இன்று இரவு மீண்டும் டெல்லி திரும்பத் திட்டமிட்டுள்ளார்.

தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ள விஜய்–ராகுல் சந்திப்பை அரசியல் வட்டாரங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

=================

logo
Thamizh Alai
www.thamizhalai.in