ராகுல் காந்தி “One Man Show” : ஞானேஷ் குமார் விவகாரத்தில் திடீர் முடிவுகள் : கொதிப்பில் இந்தியா கூட்டணி..!

ஞானேஷ் குமார் விவகாரத்தில் ராகுல் காந்தி திடீர் போராட்டங்களில் ஈடுபடுவது இண்டியா கூட்டணி கட்சிகளை கொந்தளிக்க வைத்து இருக்கிறது.
Rahul Gandhi's sudden protests regarding Gyanesh Kumar issue lleft  INDIA alliance parties seething with anger
Rahul Gandhi's sudden protests regarding Gyanesh Kumar issue lleft INDIA alliance parties seething with angersource:thamizhalai,ai generated
1 min read

டெல்லியில் இண்டியா கூட்டணி போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுப் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

தர்ணாவில் ஈர்த்த ராகுல்

அப்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் செய்த ‘திடீர் தர்ணா’ ஒட்டுமொத்த ஊடக வெளிச்சத்தையும் அவர்கள் பக்கம் திருப்பியது.

போராட்டங்களை அவர்கள் மட்டுமே முன்னெடுப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியது.

ராகுல் ஒன்மேன் ஷோ

கூட்டணிக் கட்சிகளின் தியாகத்தைப் புறக்கணித்துவிட்டு, ‘ராகுல் ஷோ’ நடத்த நினைக்கும் காங்கிரஸின் சுயநல உத்தி, கூட்டணியின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கும் என்று கூறப்படுகிறது.

முக்கிய தலைவர் அகிலேஷ்

2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 37 தொகுதிகளைக் கைப்பற்றி இண்டியா கூட்டணியின் முதுகெலும்பாக நின்றவர் அகிலேஷ் யாதவ்.

ஆனால், டெல்லி வீதிகளில் போராட்டம் வெடிக்கும்போது, மாநிலத் தலைவர்கள் களத்தில் நின்று குரல் கொடுத்தாலும், காங்கிரஸ் தலைமை அவர்களை வெறும் கூட்டணித் தொண்டர்களாக மட்டுமே பார்க்கிறது.

தனித்து செயல்படுகிறாரா ராகுல்

டெல்லியில் மற்ற தலைவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு, கூட்டணிக் கட்சிகளைக் கலந்தாலோசிக்காமல் ராகுல் நடத்திய தனியாவர்த்தனம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுலை முன்னிறுத்தி போராட்டங்கள்

“ராகுல் காந்தியை தேசியத் தலைவராக்கும் மேடையாக மட்டுமே கூட்டணி பயன்படுத்தப்படுகிறதோ?” என்ற சந்தேகம் கூட்டணிக் கட்சிகளுக்கு எழுந்துள்ளது.

காங்கிரஸின் இந்த ‘பெரிய அண்ணன்’ மனப்பான்மை கூட்டணிக்குத் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மோடிக்கு மாற்று ராகுல் மட்டும் தானா?

தேசிய அளவில் நரேந்திர மோடிக்கு மாற்றாக தன்னை மட்டுமே நிறுத்துவதில் ராகுல் காந்தி காட்டும் வேகம், கூட்டணியில் உள்ள பிற மாநிலத் தலைவர்களின் பிம்பத்தைச் சுருக்கி விடுவதாகவும் கூறப்படுகிறது.

கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி!

டெல்லியில் சம்பவங்கள், கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக இண்டியா கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் கடைசி நேரத்தில் திட்டமிட்ட போராட்ட உத்தியை மாற்றி, அகில இந்திய வானொலி பவன் வளாகத்துக்குள் நுழைந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

‘ராகுல் - பிரியங்காவின் தனிப்பட்ட போராட்டம்

இதனால், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் கூட்டுப் போராட்டமாக இருந்த நிகழ்வு, கணநேரத்தில் ‘ராகுல் - பிரியங்காவின் தனிப்பட்ட போராட்டம் மற்றும் கைது’ என்பதாக ஊடகக் கவனத்தைப் பெற்றது.

கூட்டணி தலைவர்கள் சந்தேகம்

காங்கிரஸின் உயர்மட்டத் தலைவர்கள் எடுத்த இந்தத் தனிப்பட்ட முடிவால், மற்ற கூட்டணித் தலைவர்கள் ‘நாங்கள் வெறும் கூட்டத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறோமா?’ என்ற கேள்வியை எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால்தான், அகிலேஷ் யாதவ், இந்த அதிருப்தி காரணமாகக் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த மதிய விருந்திலும் பங்கேற்கவில்லை என்று செய்திகள் வெளிவந்தன.

முன்னறிவிப்பின்றி எடுக்கப்பட்ட இந்த முடிவால், இண்டியா கூட்டணியில் பெரும் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in