”2 மணி நேரம் தீபம் ஏற்றினால் என்ன பிரச்சினை” : திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ராம ரவிக்​குமார் வாதம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் ஆண்டுக்கு முறை 2 மணி நேரம் மட்டும் தீபம் ஏற்றுவதால், யாருக்கு பிரச்சினை வரும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் ராம ரவிக்குமார் தனது வாதத்தை முன்வைத்தார்.
Rama Ravikumar argued in Supreme Court, who could possibly be affected by lighting lamp on deepa thoon
Rama Ravikumar argued in Supreme Court, who could possibly be affected by lighting lamp on deepa thoon source:thamizhalai,ai generated
2 min read

தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அனுமதி

திருப்​பரங்​குன்​றம் மலை​யில் உள்ள கல்​தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதி​மன்​றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்​றும் தர்கா நிர்​வாகம் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு தாக்​கல் செய்​யப்​பட்​டது,

ராம ரவிக்குமாரும் மேல்முறையீடு

அதேபோல், கார்த்​திகை திருநாளன்று பக்​தர்​கள் அனைவரை​யும் மலை​யில் தீபம் ஏற்ற அனுமதிக்​கக் கோரியும், தொல்​லியல் துறை அனுமதி பெற வேண்​டும் என்ற சரத்​துக்கு எதிராகவும் ராம ரவிக்​குமார் என்​பவர் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​திருந்​தார்.

உச்ச நீதிமன்ற அமர்வு விசாரணை

இந்த மனுக்​கள் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் அர​விந்த் குமார், விபுல்.எம்.பஞ்​சோலி ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு விசா​ரிக்​கப்​பட்டு வரு​கிறது.

மத நல்லிணக்கம் பாதிக்கப்படுமா?

3-வது நாள் விசா​ரணை​யின்​போது, சிக்​கந்​தர் தர்கா அரு​கில் தீபம் ஏற்​றக் கூடாது என வலியுறுத்தி அரங்​கநாதன் என்​பவர் சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் நரேந்​திர ஹூடா வாதிடும்​போது, “மத நல்​லிணக்​கத்தை சீர்​குலைக்​கும் நோக்​கில் கடந்த, 1862,1902 ஆகிய ஆண்​டுகளில் சிலர் தீபத்தை தர்கா அரு​கில் ஏற்ற முயன்​றபோது அது தடுக்​கப்​பட்​டது.

இதையடுத்து, 1994-ம் ஆண்டு தர்கா அரு​கில் தீபம் ஏற்ற வேண்​டும் எனக் கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம், தர்கா அரு​கில் தீபம் ஏற்​று​வது மரபு கிடை​யாது, எனவே கோரிக்கை ஏற்க முடி​யாது என தெளிவுபடுத்​தி​யுள்​ளது.

அதேபோல், தர்கா சார்​பில் நெல்​லித் தோப்பு பகுதி​யில் விலங்​கு​களை பலி​யிட்டு வழிபட அனுமதிக்க முடி​யாது.

நூற்​றாண்டு பழமையான நடை முறையை மாற்ற முடி​யாது, கடைபி​டிக்​கப்​படாத புதிய மரபு​களை மத வழிபாடு எனக்​கூறி சேர்க்​கவும் முடி​யாது என திட்​ட​வட்​ட​மாக கூறியுள்​ளது” என்​றார்.

பிள்ளையார் கோவில் அருகே தீபம் ஏற்றப்படுகிறது

“மலை​யில் உள்ள கோயிலுக்கு அருகேதான் 150 ஆண்​டுகளுக்கு மேலாக தீபம் ஏற்​றப்​பட்டு வரு​கிறது. தர்கா அருகே தீபம் ஏற்​றப்​பட்ட வரலாறு கிடை​யாது, எனவே, தர்கா அருகே உள்ள கல்​தூணில் தீபம் ஏற்ற வேண்​டும் என்று கூறு​வதை ஏற்க முடி​யாது.

தற்​போது கல்​தூணில் தீபம் ஏற்ற அனுமதித்​தால் பின்​னர் அங்கு வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்​டும் என்ற கோரிக்கை வைப்​பார்​கள், இது பிரச்​சினைகளுக்கு வழி வகுக்​கும்” என வாதிட்​டார்.

கோவில் நிலத்தின் தான் கல்தூண்

ராம ரவிக்​குமார் சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் வள்​ளியப்​பன் மற்​றும் வழக்​கறிஞர் லக் ஷ்​மண் ராஜா ஆகியோர், “தர்​கா​வுக்கு படிக்​கட்​டுகள், கொடிமரம், புது மண்​டபம் என அனைத்​தையும் சேர்த்து 86 சென்ட் நிலம்​தான் சொந்​த​மாக உள்​ளது, ஆனால், கோவிலுக்கு 171.17 ஏக்​கர் நிலம் உள்​ளது, அந்த குறிப்​பிட்ட கல்​தூண் கோயில் நிலத்​தில் அமைந்​துள்​ளது அதில்​தான் தீபம் ஏற்ற வேண்​டும் என கோரு​கிறோம்.

இரண்டு மணி நேரம் மட்டும் தீபம் ஏற்றப்படும்

தற்​போது குறிப்​பிட்ட கல் தூணில் விளக்கு ஏற்​றும் வகை​யில் குழிவான அமைப்பு இருக்​கின்​றது அதில் நெய் ஊற்றி திரியை வைத்து தீபம் ஏற்​றினால் இரண்டு மணி நேரம் தீபம் அணை​யாமல் எரியும்.

தமிழகத்​தில் மருதமலை, சுவாமிமலை, பழனி மலை முருகன் கோயில்​களி​லும் இவ்​வாறுதான் தீபம் ஏற்​றப்​படு​கிறது. ஆண்​டுக்கு ஒரு நாள் 2 மணி நேரம் மட்​டும் அந்த குறிப்​பிட்ட கல்​தூணில் தீபம் ஏற்​று​வ​தால் யாருக்கு என்ன பிரச்​சினை ஏற்​பட்டு விடப்​போகிறது” என தெரி​வித்​தனர்.

=====