

திருப்பரங்குன்றம் தீபத் தூண்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், இதை ஏற்க மறுத்த தமிழக அரசு தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததோடு, நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
நீதிபதிகள் தீர்ப்பு - அரசுக்கு சம்மட்டி அடி
இதை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, “ நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்தது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் தான் என்றும், அங்கு தீபம் ஏற்றலாம் எனவும், தேவஸ்தானம் இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தர விட்டனர். மேலும் தமிழக அரசின் செயல்பாட்டிற்கு கண்டனத்தை பதிவு செய்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.
பத்திரிகையாளர்களுக்கு நன்றி
வழக்கில் கிடைத்து இருக்கும் வெற்றியை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட மனுதாரர் ராம ரவிக்குமார், “ திருப்பரங்குன்றம் விஷயத்தை உலகிற்கு தெரிவித்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள். இந்த வழக்கு முருகன் அருளால் வெற்றிஅடைந்து இருக்கிறது. இந்த வெற்றி நிச்சயமாக மேலும் தொடரும் என்று நம்புகிறோம்.
உள்ளூர் மக்களுக்கும் நன்றி
இந்த வெற்றிக்காக போராடிய உள்ளூர் மக்கள், என்னை வெளியூர்காரர் என்று சொன்னார்கள். நான் மதுரைக்காரன் தான். உள்ளூர்காரன், வெளியூர்காரன் என்று பொய் வாதம் என்பதை அம்பலப்படுத்தினார்கள்.
வழக்கு தொடுத்தவர் மீதும், வழக்கிற்கு நீதி சொன்ன நீதிபதி மீதும் அவதூறு பரப்பினார்கள்.
நீதிமன்ற உத்தரவை மதித்து நடக்கிறோம்
நாங்கள் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, சட்டத்தின் பிள்ளையாக எந்தவித வார்த்தைகளையும் பேசவில்லை. இந்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு கொடுத்து இருக்கிறது. நீதிமன்றங்களின் உத்தரவுகளை நாங்கள் மதிக்கிறோம்.
வெற்றியை மக்களுக்கு சமர்பிக்கிறோம்
இந்த வெற்றியை திருப்பரங்குன்றம் மலை மீது உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக போராடிய, திருப்பரங்குன்றம் மக்களுக்கும், இதற்கு முன்பு பலியான, எங்களது ஐயா ராஜகோபால், காளிதாசன், பரம சிவன் உள்ளிட்டோருக்கும் , இந்த நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று தன்னுடைய உடலை இறைவனுக்கு அர்ப்பணித்த பூரண சந்திரனுக்கும் சமர்ப்பிக்கிறோம்.
எங்கள் பணி நிச்சயமாக தொடரும். அவதூறு பரப்பியவர்கள் இனியாவது மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று, அந்தப் பேட்டியில் ராம ரவிக்குமார் கேட்டுக் கொண்டார்.
முருகன் எல்லாவற்றையும் பார்க்கிறார்
எல்லாவற்றையும் முருகன் பார்த்து கொண்டு இருக்கிறார். அவூதூறு பரப்பியவர்கள், அலட்சியமாக பேசியவர்கள், எங்களை அவமானம் படுத்தினீர்கள். அந்த அவமானங்கள் எல்லாத்தையும் அடித்து, உடைத்து, தகர்த்த முருகன் எங்களுக்கு வெகுமானம் தந்து இருக்கிறார்.
எல்லாம் புகழும் முருகனுக்கே
எல்லாம் புகழும் முருகனுக்கே, எல்லாம் புகழும் முருகனுக்கே, எல்லாம் புகழும் முருகனுக்கே. தமிழக அரசு அனைத்து மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். மதச்சார்பற்ற அரசு ஆனால் இந்துக்களுக்கு மட்டும் விரோதமாக இருந்தது.
முஸ்லிம்களுக்கு எதிராக இல்லை
தர்காவுக்கு 15 மீட்டர் தள்ளி தீபம் ஏற்றி கொள்ளலாம் என்று நீதிமன்ற தீர்ப்பு இருந்தும் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதால் சமூக நல்லிணக்கம் கெட்டு போய்விடும் என்று சொன்னார்கள். இந்துக்கள் யாரும் முஸ்லிம்களுக்கு எதிராக இல்லை.
மக்களுக்கு எதிராக அரசு
நீதிமன்றம் உத்தரவு கொடுத்த போதும் கூட நாங்கள் சட்டத்தின்படி தான் மதித்து போனோம். அப்படி இருக்கையில், மேல்முறையீடு என்று சொல்லி நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வாதிட்டு, கோவிலுக்கு எதிராக, கடவுளுக்கு எதிராக, சமயத்திற்கு எதிராக வழக்கு நடத்தினர்.
இது ஏற்கத்தக்கது அல்ல. மக்களிடம் வெறுப்புணர்வை இந்த அரசு சம்பாதித்து இருக்கிறது” இவ்வாறு ராம ரவிக்குமார் பேட்டியளித்தார்.
========