

திண்டுகல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026 சட்டசபை தேர்தல் பாமக, தேமுதிக, அமமுக மற்றும் வேறு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக-அதிமுக கூட்டணி சந்திக்கும் என்றார்.
திருமாவளவனுக்கு கிடைக்கும் வாக்குகளில் பாதியை நடிகர் விஜய், தன் பக்கம் ஈர்த்து விடுவார் என்று குறிப்பிட்ட அவர், சிறுபான்மையினர் வாக்குகளும் அவருக்கு கணிசமாக செல்லும் வாய்ப்பு இருக்கிறது என்றார்.
எனவே, தான் விஜய்யை பார்த்து திமுக அச்சப்படுவதாக ராம. சீனிவாசன் தெரிவித்தார்.
பாஜக கூட்டணிக்கு விஜய் ஒருபோதும் வர மாட்டார் என்று அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
கட்சி தொடங்கியவுடன் சந்திக்கும் முதல் தேர்தலிலேயே கூட்டணி என்றால், அந்தக் கட்சி நிலைக்காது என்பதை உணர்ந்தவர் விஜய், எனவே தனித்தே களம் காண்பார் என்றார்.
விஜயகாந்த், சிரஞ்சீவி, பவன் கல்யாண் வழியில் விஜய் பயணிப்பார் என்று கருத்து தெரிவித்த ராம. சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி முதல்வர் என்று கூறி அவரால் வாக்கு கேட்க முடியாது என்று கூறினார்.