

பாமக உட்கட்சி மோதல்
Ramadoss on ADMK PMK Alliance : தந்தை - மகன் இடையேயான மோதல், பாட்டாளி மக்கள் கட்சியை பிளவுபடுத்தி இருக்கிறது. நிர்வாகிகளும், தொண்டர்களும் பெரும் குழப்பத்தில் இருக்க, இரண்டு பேரின் சண்டை ஓய்ந்தபாடில்லை. இந்தநிலையில், தேர்தலுக்கு 3 மாதங்களே இருப்பதால், ராமதாசும், அன்புமணியும் ஆளுக்கொரு பக்கம் போவார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பு
பாமக வாக்குகள் பிரிவது யாருக்கு லாபம்? தேர்தலுக்கு பிறகு அந்தக் கட்சியின் நிலைமை என்ன? போன்ற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. இந்தநிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அன்புமணி, அதிமுக கூட்டணியை உறுதி செய்து விட்டார்.
அன்புமணி அமைத்த கூட்டணி கேலிக்கூத்து
இது ராமதாஸ் தரப்பை கடும் கோபத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. இது தொடர்பாக அன்புமணி மீது கடும் விமர்சனங்களை வைத்து அறிக்கை வெளியிட்ட ராமதாஸ், தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி அமைத்துள்ளதை, தனி மனிதன் ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். அதனை பாமக கூட்டணி என தெரிவிக்க முடியாது.
பாமக என்னுடைய கட்சி
பாமக நான் ஆரம்பித்த கட்சி. இதற்கு உரிமை கொண்டாட யாருக்கும் அதிகாரம் இல்லை. இரவு பகல் பாராமல் ஓடி ஓடி கட்சியை வளர்த்தவன் நான். நான் செய்த சத்தியத்தை மீறி அன்புமணியை மத்திய அமைச்சராக்கினேன். இறுதியில் அவரே எனக்கு வேட்டு வைப்பார் என்று முன்பே தெரியவில்லை.
ராமா
அவர் செய்த தில்லுமுல்லு வேலைகள் அனைத்தையும் சேர்த்து தான் அவரை இதன் பின்னரும் கட்சியில் வைத்திருக்க முடியாது என்று அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினோம். கட்சியின் தலைவர் பதவியைக் கொடுத்தேன். ஆனால் சூழ்ச்சி செய்து என்னிடமிருந்தே கட்சியை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
கூட்டணி அமைப்பது நீதிமன்ற அவமதிப்பு
அன்புமணியுடன் கூட்டணி அமைத்தால் அது நீதிமன்ற அவமதிப்பு நான் உருவாக்கி வளர்த்தெடுத்த பலரும் அவர் பின்னால் ஓடிவிட்டனர். அன்புமணியின் துரோகத்தை கட்சியில் உள்ள அனைவரும் புரிந்து கொண்டார்கள்.
அன்புமணியால் ஜெயிக்க முடியாது
அன்புமணி யாரை, எங்கு நிறுத்தினாலும் அவர்களுக்கு பாமகவினர் வாக்களிக்க மாட்டார்கள். நான் தான் கட்சியின் நிறுவனர், தலைவர். அன்புமணியுடன் யார் கூட்டணி அமைத்தாலும் அது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகவே கருதப்படும்.
கூட்டணி அமைப்பது ’கூத்து’
நேற்றைய தினம் நடைபெற்றது ஒரு கூத்து. அதைத் தாண்டி ஒன்றும் இல்லை” என்று ராமதாஸ் காட்டமாக தெரிவித்தார்.
===