

பாமக உட்கட்சி மோதல்
PMK Leader Ramadoss vs Anbumani Ramadoss Fight Update in Tamil : பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ், தலைவரும் அவரது மகனுமான அன்புமணி இடையேயான தீராத மோதலால், நிர்வாகிகளும், கட்சியும் பிளவுபட்டு நிற்கின்றன. சட்டமன்ற தேர்தலுக்கு 4 மாதங்களே இருக்கும் நிலையில், பாமக என்ன செய்ய போகிறது?. யார் கூட்டணிக்கு யார் போவார்கள் என்பது சஸ்பென்சாவே நீடிக்கிறது.
பாமக கொள்கை தலைவர் பெரியார்
இந்தநிலையில், பாமகவின் கொள்கை தலைவர்களில் ஒருவரான பெரியாரின் 52 வது நினைவு தினத்தினை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் பாமக செயல்தலைவர் ஸ்ரீ காந்தி பரசுராமன் உள்ளிட்டோர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பொய் சொல்கிறார் அன்புமணி - ராமதாஸ்
அதனை தொடர்ந்து பேட்டியளித்த ராமதாஸ், ”அன்புமணி தெரிவித்து வரும் பொய்யும் புரட்டும் எடுபடாது. பாமகவில் உள்ள நூற்றுக்கு 99 சதவிகிதத்தினர் என்னுடன் தான் இருக்கின்றனர். பாமக சார்பில் சேலத்தில் 29 ஆம் தேதி நடத்தப்படும் பொதுக்குழு செல்லாது என அன்புமணி கூறுகிறார் என்றார் ராமதாஸ்.
அன்புமணி வழிபோக்கன் தான் - ராமதாஸ்
அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எப்போதோ நீக்கிவிட்டேன். அவர் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று ராமதாஸ் வினவினார். வழிப்போக்கன் சொல்வது போல் அன்புமணி பேச்சு இருக்கிறது. திட்டமிட்டபடி 29ம் தேதி சேலத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடக்கும்” இவ்வாறு ராமதாஸ் பேட்டியளித்தார்.
======================