’மாம்பழம் எங்களுக்கே! கூட்டணி பேச்சு’ : ராமதாஸ் வெயிட்டிங்

Ramadoss about PMK Mango Symbol and Alliance : மாம்பழ சின்னம் தங்களுக்கே வரும் என்றும், கூட்டணி பேச்சு தொடர்பாக நல்ல செய்தி வரும் என்று ராமதாஸ் தெரிவித்து இருக்கிறார்.
Ramadoss said that Mango symbol will come to them, good news will come regarding alliance talks
Ramadoss said that Mango symbol will come to them, good news will come regarding alliance talksSource : Google
1 min read

பாமகவில் பிளவு

Ramadoss said that Mango symbol will come to them, good news will come regarding alliance talks : பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான உச்சக்கட்ட மோதலால், கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. இதனால், நிர்வாகிகளும், தொண்டர்களும் சோர்வடைந்து கிடக்கிறார்கள்.

மாழ்பழ சின்னம் யாருக்கு?

மாம்பழ சின்னம் யாருக்கு என்ற விவகாரமும், நீதிமன்றத்தில் கையில் உள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் அன்புமணி, பெரும்பான்மையான நிர்வாகிகள் தன்பக்கம் இருப்பதால், நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார்.

தனித்து நிற்கும் ராமதாஸ்

தனித்து விடப்பட்ட ராமதாஸ், அன்புமணி இருப்பதால், அதிமுக கூட்டணிக்கு செல்ல முடியாமல் நிற்கிறார். அவருக்கு திமுக அல்லது தவெக கூட்டணி தான் சாய்ஸ் ஆக இருக்கிறது. திமுக கூட்டணிக்கு செல்வதென்றால், அங்கு விடுதலை சிறுத்தைகள் இருப்பது, ராமதாசுக்கு நெருடலாக உள்ளது.

மாம்பழம் எங்களுக்கே...

இந்தநிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ், “ மாம்பழம் சின்னம் தொடர்பான நீதிமன்ற வழக்கில் தங்கள் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பு வெளியாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கூட்டணி பேச்சுவார்த்தை

கூட்டணி பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் ராமதாஸ் தெரிவித்தார். எனவே, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாமக எந்த அணியுடன் இணையப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மாம்பழ சின்னம் தொடர்பாக ராமதாஸ் நம்பிக்கையுடன் பேசி இருப்பதால், வழக்கின் தீர்ப்பும், கூட்டணி பேச்சுவார்த்தையும் ராமதாஸ் தரப்பின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கிறது.

ராமதாஸ் வந்தால், திருமா?

ராமதாசை திமுக சேர்க்க முன்வந்தால், திருமாவளவன் என்ன செய்வார்? கூட்டணியை விட்டு வெளியேறுவாரா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. அதேசமயம், தவெக கூட்டணிக்கு இதுவரை யாரும் செல்லாத நிலையில், ராமதாஸ் அங்கு சென்றால் அது யாருக்கு பயன் என்ற வினாவும் எழுந்து இருக்கிறது.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in