

தவெக மீது அதிமுக பாசம்
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து, எடப்பாடி தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தினாங்க.
தவெகவில் அதிமுக நிர்வாகிகள்
பின்னர் நடந்த சமாதான பேச்சுவார்த்தை பிறகு சிலர், எடப்பாடி பக்கம் திரும்ப ஆறு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்து விட்டார்கள்.
7 தொகுதிகளில் இடைத்தேர்தல்
முதல்வர் விஜய் ராஜினாமா செய்த, திருச்சி கிழக்கு உட்பட 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றுக்கு விரைவில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருக்கிறது.
தவெக அரசு குதிரை பேரம்
இந்தநிலையில், மேலும் 12 அதிமுக எம்எல்ஏக்களை தூக்க திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “அதிமுக எம்எல்ஏக்களை தொடர் ராஜினாமா செய்ய வைத்து, குதிரை பேரத்தில் தவெக அரசு முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.
தேர்தல் முடிவு வெளிவந்த பிறகு, ஆட்சி அமைக்கும் பெரும்பான்மைக்கென தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களை சந்த்கித்து விஜய் அன்பை பரிமாறிக் கொண்டார்.
அதிமுகவில் பிளவை ஏற்படுத்திய தவெக
அமைச்சர் பதவி ஆசை காட்டி அதிமுக குடும்பத்தில் பிளவைத் தந்து, அதிமுக பொதுச்செயலாளரை சந்திக்காமலே அரசியல் மரபுகளை, சட்ட விதிகளை மீறி, அதிமுக எம்எல்ஏக்கள் சிலரை அவர்களின் இருப்பிடமே சென்று சந்தித்து அரசியல் ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.
இதுவரை 6 அதிமுக எம்எல்ஏக்களை தூக்கி, ராஜினாமா செய்ய வைத்த அபத்தமான அரசியல் ஆட்டத்தை விஜய் தொடர்ந்து ஆடிக் கொண்டிருக்கிறார்.
மேலும் 12 அதிமுக எம்எல்ஏக்கள்
மேலும் 12 பேர் வரையிலும் ஆட்டத்தை தொடர்வார் என செய்திகள் வருகிறது. அதிமுக, எடப்பாடி பழனிசாமி மீது விஜய்க்கு இந்த வன்மம்? அதிமுகவை தனிமைப்படுத்தினால், தவெகவை தேசிய அளவிலே வளர்க்கலாமென நினைக்கிறார்கள்.
காலம் மாறும் போது விளைவுகள் தெரியும்
இப்படியே போய்விடாது. காலம் மாறும். அப்போது அரசியலிலே கடும் பின்னடைவுகளை விஜய் சந்திக்கிற தீர்ப்புகளும் வரும். விஜய் ஒன்றும் அவதார புருஷனில்லை. தமிழ்நாட்டை காக்க வந்த கடவுளுமல்ல. தலைகால் புரியாமல் ஆடுகிற ஆட்டம் எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம்? “ என்று ஆர்பி. உதயகுமார் எச்சரித்துள்ளார்.
==========