

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. மேயர் பிரியா ராஜன் 90 புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார். இது இப்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தவெக அரசின் அதிரடி
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாமல் அரசு அலுவலகங்களும், ஊழியர்களும் மக்களுக்காக செயல்பட வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளது. அதுதொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
திமுக திட்டங்கள் மதிப்பீடு
திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு தற்போது வரை தொடங்கப்படாமல் இருக்கும் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அவை தேவைக்கு அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முறைகேடு நடந்திருப்பதாக தவெக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
துறை ரீதியாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் யாவும் ரத்து செய்யப்பட்டும் வருகிறது.
பிரிண்டர் கொள்முதல் - சிக்கிய மேயர்
இந்தநிலையில் தான் சென்னை மாநகராட்சியில் 90 புதிய திட்டங்களுக்கு மேயர் பிரியா நிதி ஒதுக்கியது சிக்கலாக உருவெடுத்து உள்ளது.
அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஒன்றாக 100 பள்ளிகளுக்கு ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் பிரிண்டர் மெஷின் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறைந்த விலைக்கு கொள்முதல் - தவெக
ஆனால் தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றிக் கழக அரசு 100 பள்ளிகளுக்கு ரூபாய் 22.12 லட்சத்தில் பிரிண்டர்களை வாங்கிக் கொடுத்துள்ளது.
இதன் மூலம் அரசுக்கு ரூபாய் 37.78 லட்சம் மீதமாகி உள்ளது. இது பல்வேறு விதமான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
பிரிண்டர் விவகாரத்தில் அப்படியே 60 சதவிகித தொகை அதிகமாக பட்ஜெட்டில் காட்டப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களின் மதிப்பீடு கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டு இருப்பது, மேயர் பிரியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
90 புதிய திட்டங்களின் மதிப்பை மறு ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் மதிப்பீடு
சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இது போன்ற நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
===============