

ஆயத்தமாகும் அதிமுக
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அதிமுக, அதற்கான முயற்சிகளை முடுக்கி விட்டு இருக்கிறது. சசிகலா, தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றோர் ஒருங்கிணைப்பு என்று தொடர்ந்து பேசி வந்தாலும், அனைத்தையும் புறந்தள்ளி விட்டு, கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவனம் செல்த்தி வருகிறது.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு
இந்தநிலையில், அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதால், தற்காலிக அவைத் தலைவராக கே.பி. முனுசாமி செயல்பட்டார்.
அதிமுக பொதுக்குழு - 16 தீர்மானங்கள்
அமைச்சர் வளர்மதி வரவேற்புரை நிகழ்த்த, தொடர்ந்து அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அதிமுக பொதுக்குழுவின் முதல் 8 தீர்மானங்களை வாசித்தார். பின்னர் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் 8 தீர்மானங்களை வாசித்தார்.
அதிமுக பொதுக்குழு முக்கிய தீர்மானங்கள் :
* ஏப்ரல் மாதம் அதிமுக - பாஜக இடையே கூட்டணி அமைத்ததற்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கப்பட்டு தீர்மானம்
* சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது
* கூட்டணி கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்
* கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்
* மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்வி
* தீவிர வாக்காளர் திருத்த பணியான SIRஐ அதிமுக வரவேற்கிறது
* நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 22 சதவிகிதமாக உயர்த்த திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
* அந்நிய முதலீட்டில் ஆமை வேகம், குறையும் முதலீடுகள், போலி புள்ளி விவரங்கள், முதல்வர் ஸ்டாலினுக்கு கண்டனம்
* தமிழ்நாட்டில் நான்கரை ஆண்டுகளாக சிறுமிகள், இளம் பெண்கள், வயதான பெண்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல்
* தமிழக அரசு ஊதாரித்தனமாக செலவழித்து விட்டு, தமிழக மக்களை தொடர்ந்து கடனாளியாக்குகிறது
* தொடர் கொள்ளைகள், கொலைகள், வழிபறி என சட்டம் ஒழுங்கு சரிந்து கிடக்கிறது
* நீட் உளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாதற்கு திமுகவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
* நீதித்துறை மீதான மிரட்டல்களை ஆட்சியாளர்கள் கைவிடவேண்டும், நீதித்துறையில் அரசின் தலையீடு இருக்கக் கூடாது.
* நீதித்துறைக்கே சவால்விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனநிலையை பொதுக்குழு கண்டிக்கிறது
* எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்கவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
=========================