”முதல்வர் வேட்பாளர் விஜய்” அதிமுக கூட்டணி இல்லை : தவெக தீர்மானம்

TVK Vijay in TVK General Body Meeting 2025 : 2026 தேர்தலில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என, தவெக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Resolution passed in TVK General Body Meeting, Vijay will be chief ministerial candidate in 2026 tn elections
Resolution passed in TVK General Body Meeting, Vijay will be chief ministerial candidate in 2026 tn elections
1 min read

தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்

TVK Vijay in TVK General Body Meeting 2025 : கரூர் சம்பவத்திற்கு பிறகு 40 நாட்கள் கழித்து தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “ கடந்து வந்த பாதை சாதாரணமானது கிடையாது. எண்ணற்ற சோதனைகளை கடந்து வந்திருக்கிறோம், பல தடைகளை தாண்டி வந்திருக்கிறோம். இன்று அரசியலின் மையப்புள்ளி நம் தலைவர் தான்” எனக் கூறினார்.

கரூர் சம்பவம் - இரங்கல்

கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் தீர்மானங்களை வாசித்தார். கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொது குழுவில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேடை ஏறிய அவரை விஜய் ஆரத்தழுவி வரவேற்றார்.

தவெக செயற்குழு தீர்மானங்கள்

  • தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுவதை கண்டித்தும் தீர்மானம்

  • கோவை விவகாரத்தில் திமுக அரசிற்கு கண்டனம். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்

  • இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதற்கு கண்டனம்

  • மீனவர்கள் கைது விவகாரத்தில் கடிதம் மட்டுமே எழுதிவிட்டு அமைதியாக இருக்கும் திமுக அரசுக்கு எதிராக தீர்மானம்

  • மழையில் நனையும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாத திமுக அரசுக்கு கண்டனம்

  • தலைவரை காண வரும் பொதுமக்களுக்கு பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு, முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்

  • விஜய் தலைமையில் 2026 சட்டமன்ற தேர்தலில் சந்திப்பது, முதல்வர் வேட்பாளர் விஜய் தான்.

  • தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளும் எடுக்கும் முழு அதிகாரத்தை கழகத் தலைவருக்கு வழங்கிட பொதுக்குழு ஒப்புதல்

  • அதிமுகவுடன் கூட்டணி இல்லை

அதிமுக கூட்டணி - கதவை மூடிய தவெக

இவ்வாறு 12 தீர்மானங்கள் தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் அதிமுக கூட்டணியை தவெக ஏற்காது என்பது மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. கரூர் சம்பவத்திற்கு பிறகு அதிமுக - பாஜக கூட்டணிக்கு விஜய் வருவார் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வந்த நிலையில், இதற்கு தவெக பொதுக்குழு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது.

முதல்வர் வேட்பாளர் விஜய் தான்

விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறப்படுவதால், தவைக தலைமையை ஏற்கும் கட்சிகள் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம். ஓபிஎஸ், தினகரன் போன்றோர் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் அதிமுக, பாஜக கூட்டணிக்கு வர வாய்ப்பே இல்லை. விஜய் தலைமையை ஏற்று தேர்தலை சந்திக்கவும் அதிமுக விரும்பாது என்பது மட்டுமே தற்போதைய சூழ்நிலை.

======================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in