அதிகரித்து வரும் கோடை வெப்பம்
கத்திரி வெயில் காலம் முடிவடைந்திருக்கும் நிலையிலும் , தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையானது வீசும் என்றும் , மழைக்கான வாய்ப்பு ஏற்பட்டாலும் ,
சென்னை மற்றும் இதர பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
உலகின் அதிகமான வெப்பத்தின் பிடியில் இந்தியா
சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தின் பிடியில் இந்தியா தொடர்ந்து சிக்கித் தவிக்கும் வேளையில் 47.6 டிகிரி செல்சியஸ் பதிவாகி உலகின் அதிக வெப்பமான நகரமாக பண்டா உருவெடுத்தது.
உபி மாநிலத்தில் உள்ள பண்டா, கடந்த ஒரு மாதத்தில் இரண்டு முறை உலகின் வெப்பமான நகரமாக உருவெடுத்துள்ளது.
அதற்கு முன்னர் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி பண்டாவில் வெப்பநிலை அதிகளவாக 49.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியது.
வெப்ப அலை எதிரொலி : தயார் நிலையில் சிகிச்சை வாகனங்கள்
கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சி சார்பில் 360 சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
வர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடைவெப்பம் அதிகரித்து வருகிறது. கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும்போது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.
வெளியே செல்லும்போது, திறந்தவெளியில் வேலை செய்யும்போது தலையில் பருத்தி துணி, துண்டு, தொப்பி அணிந்து கொள்ள வேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
தீவிர மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடவேண்டும். நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு, சுவாசம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும்.
வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 200 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 16 நகர்ப்புற சமூக நல மையங்கள், 3 மகப்பேறு மருத்துவமனைகள்,
தொற்று நோய் மருத்துவமனை என மொத்தம் 360 சுகாதார நிலையங்கள் வெப்பம் தொடர்பான நோய்கள் குறித்து சிகிச்சை வழங்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெயில் அதிகம் உள்ள நேரங்களில் 57 வீடற்றோர் காப்பகங்களில் பொதுமக்கள் தங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது
=================