TN. மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : உங்கள் முன்பு 34 கேள்விகள்

Sample Population Census in Tamil Nadu : தமிழகத்தில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அடுத்த மாதம் துவங்கும் நிலையில், 34 வகையான கேள்விகள் கேட்கப்பட உள்ளன.
Sample population census in Tamil Nadu begins next month, 34 types of questions are asking
Sample population census in Tamil Nadu begins next month, 34 types of questions are askingImage Courtesy : Sample Population Census in Tamil Nadu Public Crowd Photo From Google
2 min read

10 ஆண்டுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு

Sample Population Census in Tamil Nadu : பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, 2011ம் ஆண்டு, நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து, 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்க வேண்டும்.

கொரோனா காரணமாக நிறுத்தம்

ஆனால், கொரோனா காரணமாக 2021ல் அந்தப்பணி நடக்கவில்லை. எனவே, 'நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, 2027 பிப்ரவரியில் நடக்கும்' என, மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் நவம்பர் 10 முதல் 30ம் தேதி வரை மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது.

களப்பணியில் ஆசிரியர்கள்

ஒவ்வொரு தாலுகாவிலும், 120 முதல் 150 ஆசிரியர்கள் களப்பணியில் ஈடுபடு விவரங்களை சேகரிக்க உள்ளனர். இவர்களின் பணிகளை அந்தந்த தாலுகாவின் தாசில்தார்கள் கண்காணிப்பர். முதற்கட்டமாக, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகாக்களிலும், காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியிலும் இப்பணி நடைபெற உள்ளது.

இணைய தளத்தில் பதிவிடலாம்

மாதிரி கணக்கெடுப்பு பணியை எளிமைப்படுத்தும் வகையில், நவம்பர் 1 முதல் 7ம் தேதிக்குள்(Model Population Census in Tamil Nadu Date 2025), கணக்கெடுப்பு நடக்கும் பகுதியில் உள்ள மக்கள், தாங்களாகவே தங்களின் சுய விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை துவங்குகிறது. இது குறித்து, பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மக்களின் உணவுப் பழக்கம் - விவரங்கள்

கணக்கெடுப்பில் முதல் முறையாக, மக்கள் அரிசி, கோதுமை, சிறுதானியம் போன்றவற்றில் எந்த வகை உணவை சாப்பிடுகின்றனர் என்ற விபரம் கேட்கப்பட உள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது, ”மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான ஆயத்தப் பணிகள் துவங்கி உள்ளன. ஒவ்வொரு தாலுகாவிலும், 120 முதல், 150 ஆசிரியர்கள் களப்பணியில் ஈடுபட உள்ளனர். தலைமைச் செயலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, இந்த பணிகளை ஒட்டுமொத்தமாக கண்காணிக்கும். தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை இவற்றை வழிநடத்தும்” என்று கூறினர்.

கணக்கெடுப்பின் போது பொதுமக்களிடம் கேட்கப்பட உள்ள கேள்விகள் விபரம்:

* குடும்ப தலைவரின் பெயர்

* பாலினம்

* வயது

* எஸ்.சி., எஸ்.டி., / மற்றவை

* திருமணமானவரா?

* திருமணமான வயது

* தாய்மொழி

* பிற மொழிகள் தெரியுமா?

* எழுத்தறிவு

* கல்வித்தகுதி

* பிறந்த இடம்

* வீட்டின் நிலை - அடுக்குமாடி வீடு, கல் வீடு, கூரை வீடு

* வீட்டில் உள்ள வசதிகள் - 'ஏசி, டிவி, பிரிஜ், லேப்டாப், இன்டர்நெட்' வசதி, வாகனம் இன்னும் மற்றவை

* அடிப்படை வசதி - எரிவாயு வசதி, தண்ணீர், கழிப்பறை, கழிவுநீர் சேகரிப்பு வசதி...

* உணவு வகை - அரிசி, கோதுமை, சிறுதானியம் இவை உட்பட 34 கேள்விகள் பொது மக்களிடம் கேட்கப்பட்டு விவரங்கள் பதிவு செய்யப்படும்.

மேலும் படிக்க : "சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் இல்லை": திமுகவுக்கு புரிகிறதா?

டிஜிட்டலில் கணக்கெடுப்பு

கடந்த காலங்களில், மக்கள் தொகை கணக்கெடுப்பு, காகித முறையில் மேற்கொள்ளப்பட்டது. முதல் முறையாக டிஜிட்டல் முறையில் நடைபெற உள்ளது. இதற்காக, மத்திய அரசு, 'டி.எல்.எம்., மற்றும் எச்.எல்.ஓ.,' என்ற இரண்டு செயலிகளை உருவாக்கி உள்ளது. இதில், 'டி.எல்.எம்.,' எனும் 'டிஜிட்டல் லொக்கேட்டிங் மேப்' செயலி வழியே, கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள வேண்டிய இடம் விபரம், களப்பணியாளர்களுக்கு வழங்கப்படும். எச்.எல்.ஓ., என்ற, 'ஹவுஸ் லிஸ்டிங் ஆப்ரேஷன்' செயலி வழியே, வீடுகள் கணக்கெடுப்பு பணி, சுயவிபரங்கள் சேகரிக்கப்படும்.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in