
மனம் திறந்த செங்கோட்டையன் :
Sasikala on Sengottaiyan : மனம் திறப்பேன் என்று கூறியபடி அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக ஒன்றுபட்டதால் தான் வெற்றி, 2026 சட்டமன்ற தேர்தல் முக்கியமானது என்று கூறிய அவர், பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்து உள்ளார். அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படா விட்டால், அதிமுகவில் இருந்து சென்றவர்கள் இணைந்து நடத்திக் காட்டுவோம் என்றும் செங்கோட்டையன் எச்சரித்து இருக்கிறார். அவரது கருத்துக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்து, செங்கோட்டையனுக்கு ஆதரவாக நிற்பதாக உறுதியளித்து உள்ளார்.
100 ஆண்டுகள் ஆனாலும் அதிமுக இயங்கும் :
செங்கோட்டையன் பேட்டி(Sengottaiyan Press Meet), அவரது கருத்து பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் சசிகலா, ”அதிமுக என்ற பேரியக்கம் எம்ஜிஆர் அவர்களால் ஆராம்பிக்கப்பட்டு, ஜெயலலிவால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம் இது ஏழை, எளிய, சாமானிய மக்களுக்காகவே உருவான இயக்கம். "இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்.”
உண்மையான அதிமுக தொண்டர் :
அதிமுக எந்த சக்தியாலும் அழிக்கமுடியாத ஒரு பேரியக்கம் என்பதை கழக மூத்த முன்னோடியும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்து இருக்கிறார். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களிலும் செங்கோட்டையன் உடனிருந்தவர் தனது உடம்பில் ஓடுவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரத்தம் தான் என்பதை நிரூபித்துள்ளார். கழகம் ஒன்றுபட வேண்டும் என செங்கோட்டையன் அவர்களின் கருந்துதான் இன்றைக்கு ஒவ்வொரு தொண்டர்களின் கருத்து தமிழக மக்களின் கருத்தும் இதுதான். நானும் இதைத்தான் வலியுறுத்துகிறேன்.
அதிமுக ஒரு காட்டாற்று வெள்ளம் :
அன்பு சகோதரர் செங்கோட்டையன்(Sasikala about Sengottaiyan) போன்று உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை திமுக என்ற தீயசக்தி எந்தவிதத்தில் முயற்சி செய்தாலும் அவர்களின் தீய எண்ணம் ஈடேறாது. திமுகளின் சதித்திட்டத்தை முறியடித்திட கழகத்தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றது. இதனை எந்த அணை போட்டும் யாராலும் தடுக்க முடியாது.
மேலும் படிக்க : ’தொண்டர்களின் குரலாய்’ செங்கோட்டையன் : ஓபிஎஸ் வரவேற்பு, உற்சாகம்
ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்! :
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. ஒன்றுபட்ட வலிமைமிக்க அதிமுக தான் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட வழிவகை செய்யும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்! நாளை நமதே! வெற்றி நிச்சயம்! ” இவ்வாறு சசிகலா(Sasikala on DMK) தெரிவித்துள்ளார்.
============