தமிழகத்தில் ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு: போர்க்கால அடிப்படையில் தயார் நிலையில் பள்ளி வளாகங்கள்!

நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால், வகுப்பறைகளில் தூசு மற்றும் சுகாதாரக் குறைபாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
Schools in Tamil Nadu to Reopen on June 4: Campuses on Standby on a War Footing!
Schools in Tamil Nadu to Reopen on June 4: Campuses on Standby on a War Footing!source:google
1 min read

Schools in Tamil Nadu to Reopen on June 4: Campuses on Standby on a War Footing!

ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் 2026-2027 கல்வியாண்டிற்கான கோடை விடுமுறை முடிந்து, வரும் ஜூன் 4-ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

போர்க்கால அடிப்படையில் பணிகள் தீவிரம்

மாணவர்களின் வருகையை முன்னிட்டு, பள்ளி வளாகங்களைத் தூய்மைப்படுத்தும் பணிகள் தற்போது மாநிலம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால், வகுப்பறைகளில் தூசு மற்றும் சுகாதாரக் குறைபாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை கடும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

சுகாதாரத்திற்கு முன்னுரிமை

அதன்படி அனைத்து மேசை, நாற்காலிகள் மற்றும் கரும்பலகைகள் கிருமிநாசினிகள் கொண்டு தூய்மைப்படுத்தப்படுகின்றன.

குடிநீர் பாதுகாப்பு நடவடிக்கை

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தேங்கியிருந்த பழைய நீர் அகற்றப்பட்டு, குளோரின் கலக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துரிதமாக நடைபெறும் வளாகப் பராமரிப்பு

மழைக்கால புதர்கள் மற்றும் தேவையற்ற செடிகள் அகற்றப்பட்டு, விஷப்பூச்சிகள் அச்சுறுத்தல் இல்லாத பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படுகிறது.

கழிவறை வசதிகள்

பிளீச்சிங் பவுடர் மற்றும் சுத்திகரிப்பு திரவங்கள் மூலம் கழிவறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு, தடையற்ற தண்ணீர் வசதி உறுதி செய்யப்படுகிறது.

பாதுகாப்பு ஆய்வுகள்

தூய்மைப் பணிகளுடன் தணிக்கைப் பணிகளும் தீவிரமாக நடக்கின்றன. அதாவது பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்றிதழ்கள் எனப்படும் FC ஆனது வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.

தலைமை ஆசிரியர்கள் ஆய்வு

மேலும், பள்ளிக் கட்டிடங்களின் உறுதித்தன்மை மற்றும் மின் இணைப்புகளின் பாதுகாப்பு குறித்தும் தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

விலையில்லாப் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள்

எல்லாவற்றிக்கும் மேலாக பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்குத் தேவையான விலையில்லாப் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கவும் அரசு schoolதிட்டமிட்டுள்ளது.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in