ADMK Allaince : அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு : பாஜக 27, பாமக 18, அமமுக 11 தொகுதிகள் : சுமூகமாக முடித்த எடப்பாடி!

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமூகமாக நிறைவுபெற்று, பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.
seat sharing in ADMK alliance with 27 seats allotted to BJP, 18 to PMK, 11 to AMMK
seat sharing in ADMK alliance with 27 seats allotted to BJP, 18 to PMK, 11 to AMMKani twitter
1 min read

தமிழக தேர்தல் களம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்குநாள் பரபரத்து கிடக்கிறது. கூட்டணி பேச்சுவார்த்தை ஒருவழியாக முடிந்து, தொகுதி பங்கீடு நடைபெற்று வருகிறது.

திமுகவில் சில கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது முடிவாகி விட்டது. மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தேமுதிகவிற்கு இன்னும் முடிவாகவில்லை.

அதிமுக கூட்டணி

அதிமுக கூட்டணியை பொருத்தவரை கூட்டணி பேச்சுவார்த்தைநடத்தப்பட்ட நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, எடப்பாடி பழனிசாமியும், அன்புமணியும், தினகரனும் தனித்தனியாக சந்தித்து பேசினார்கள்.

சென்னையில் பியூஷ் கோயல்

இதைத்தொடர்ந்து, பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று காலை சென்னை வந்தார்.

அவரை, கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து பேசினார்கள்.

அதிமுக தலைமையகத்தில்...

அதன்பிறகு, பிற்பகல் 3 மணி அளவில் பியூஷ் கோயல், எல், முருகன், நயினார் நாகேந்திரன், அன்புமணி, தினகரன் ஆகியோர் அதிமுக தலைமையத்திற்கு வந்தனர்.

மற்ற கூட்டணி கட்சி தலைவர்களும் வந்த பிறகு பெரிய கட்சிகளுக்கு எத்தனை இடங்களை என்பது இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

பாஜகவிற்கு 27 இடங்கள்

அதன்படி, பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 20 இடங்கள் கொடுக்கப்பட்ட நிலையில், இப்போது 27 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாமகவிற்கு 18 இடங்கள்

அன்புமணி தலைமையிலான பாமகவிற்கு அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. கடந்த 2021 தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டது.

அமமுகவிற்கு 11 இடங்கள்

முதன்முறையாக அதிமுக கூட்டணிக்கு வந்திருக்கும் தினகரனின் அமமுக கட்சிக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்சி குக்கர் சின்னத்தில் போட்டியிடும் எனத் தெரிகிறது.

அதிமுக வெற்றிக் கூட்டணி

இதை முறைப்படி அறிவித்த எடப்பாடி பழனிசாமி, ”அதிமுக கூட்டணி வெற்றிக் கூட்டணி, திமுகவின் பொய் பிரசாரம் எடுபடாது. நாங்கள் டெல்லி சென்றதை திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார். நாங்கள் டெல்லி சென்றாலே அவர் பயப்படுகிறார்.

திமுக கூட்டணியில் சிக்கல்

ஆனால், அவரால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இன்னும் முடிக்க முடியவில்லை. 20 நாட்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை

மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அந்தக் கட்சிகளுக்கும் எத்தனை இடங்கள் என்பது இறுதி செய்யப்படும் என்ற எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

========================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in