”நெல்லை சாலையில் முளைக்க விடுவது திமுகவின் சாதனை” : சீமான் ஆவேசம்

நெல்லை தெருவில் போட்டு முளைக்க விடுவது தான் திமுக ஆட்சியின் சாதனை என சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Seeman strongly criticized the DMK govt allowing paddy to spoiled in rain
Seeman strongly criticized the DMK govt allowing paddy to spoiled in rain
1 min read

மழையில் நனைந்து வீணான நெல்

Seeman Condemned Dmk Govt on Paddy Procurement : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி டெல்டா மாவட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் பெரும் மதிப்பிலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைவிட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆளும் திமுக அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் பெரிய பாதிப்பினை சந்தித்து வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

டாஸ்மாக் சரக்குகளுக்கு பாதுகாப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”அரசு டாஸ்மாக்கில் விற்கும் சரக்குகளை கிடங்குகள் அமைத்து பாதுகாத்து வருகிறது.

மழையில் நனையும் நெல், அரசு வேடிக்கை

ஆனால் உணவு தேவையான நெல்லை கொள்முதல் செய்யாமல் மழையில் நனைய விட்டு முளைக்க வைக்கிறது அரசு. நெல்லை தெருவில் போட்டு முளைக்க விடுவது தான் திமுக ஆட்சியின் சாதனை.கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி ஆட்சி காலத்தில் சேமிப்பு கிடங்கு கட்டியிருந்தால் நெல் வீதியில் கிடந்திருக்குமா?

வாக்காளர் திருத்த பட்டியல்

வாக்காளர் திருத்த பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற திருமாவளவன் கருத்தை நான் வரவேற்கிறேன். திமுகவிடமிருந்துதான் நாம் நாட்டை காக்க வேண்டும்” இவ்வாறு சீமான் பேட்டியளித்தார்.

=======================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in