

திமுக கூட்டணியில் திருமாவளவன் ஏற்கனவே வருத்தத்தில் இருக்கிறார். பாமக கூட்டணிக்கு வந்தால், அங்கு விடுதலை சிறுத்தைகள் இருக்காது என்பது அவர் தெளிவுபடுத்தி வருகிறார். அன்புமணியுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் ராமதாஸ், 2026 சட்டமன்ற தேர்தலை திமுக கூட்டணியில் அங்கம் எதிர்கொள்ள விருப்பமாக உள்ளார்.
இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ராமதாசை, தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “ மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். அவருடன் அரசியல் பேசவில்லை. கூட்டணி குறித்தும் ஆலோசிக்கவில்லை. தமிழகத்திற்கு தேவையான முடிவை ராமதாஸ் எடுப்பார். திமுக கூட்டணியில் பாமகவை சேர்ப்பது குறித்து முதல்வர்தான் முடிவெடுப்பார்.
பாமகவுக்குள் குழப்பம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை” என்று கூறினார்.
====