TVK Vijay Erode : தமிழகத்தை ஆளப்போவது விஜய் தான் : செங்கோட்டையன்!

Sengottaiyan Speech About Vijay in TVK Erode Manadu : தவெக தலைவர் விஜய் 500 கோடி வருமானத்தை விட்டுவிட்டு மக்களுக்கு சேவையாற்ற வந்துள்ளார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Sengottaiyan Latest Speech About Vijay in TVK Erode Manadu Public Meeting Latest News in Tamil
Sengottaiyan Latest Speech About Vijay in TVK Erode Manadu Public Meeting Latest News in TamilGoogle
1 min read

பரப்புரை கூட்டத்தில் செங்கோட்டையன் உரை

Sengottaiyan Speech About Vijay in TVK Erode Manadu : ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளையில் தவெக சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக தவெக தலைவர் விஜய், இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.

வரலாறு படைக்கும் கூட்டம்

கோவை விமான நிலையத்தில் இருந்து விஜய் வெளியில் வந்ததும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களை பார்த்து விஜய் கையசைத்தபடி வந்தார். பின்னர், மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டத்தில் தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசும்போது, “கடலென கூடியுள்ள கூட்டத்தை பார்க்கும்போது வரலாறு படைக்கும் கூட்டமாக தெரிகிறது என்று கூறினார்.

தமிழகத்தை ஆளப்போவது விஜய் தான்

மேலும், விஜய் மனிதநேயம் மிக்கவர், உங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர். 500 கோடி வருமானத்தை விட்டுவிட்டு மக்களுக்கு சேவையாற்ற வந்துள்ளார் தவெக தலைவர் விஜய். உலக வரலாற்றில் ஒரு புரட்சி தலைவரை பார்த்தேன், பின்னர் புரட்சி தளபதியை பார்க்கிறேன். தமிழகத்தில் ஆட்சிக்கு வர சிலர் கனவு கண்டு வருகிறார்கள். ஆனால், தமிழகத்தை ஆளப்போவது விஜய் தான்.

வெற்றி வரலாறு படைக்கப்படும்

இந்தக் கூட்டம் வெற்றி வரலாற்றை படைக்கும் கூட்டம். 234 தொகுதிகளிலும் தவெக தலைவர் யாரை விரல் காட்டுகிறோரோ, அவர்தான் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் என்ற சாதனையை படைக்கும் அளவிற்கு வெற்றியைத் தேடித் தாருங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையனின் அரசியல் நகர்வு

இந்நிகழ்ச்சியில், சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா படமும், தவெக கரை வேட்டியுடனும் செங்கோட்டையன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு பலரும் அரசியல் பார்வை குறித்த கருத்துக்களை வீசினாலும் செங்கோட்டையனின் இந்த புதிய அரசியல் தொடுப்புக்கு சில காரணங்கள் இருக்கும் என்று அவரது இணைப்பு வட்டாரங்களில் கிசுகிசுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in