தவெக தேர்தல் அறிக்கை குழு: செங்கோட்டையன் இல்லை, பிரபாகருக்கு இடம்

TVK Election Manifesto Committee for 2026 TN Election : தவெக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழுவில், செங்கோட்டையன் இடம்பெறவில்லை. J.C.D. பிரபாகருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
Sengottaiyan not included in election manifesto committee formed by T.V.K. vijay, J.C.D. Prabhakar given chance
Sengottaiyan not included in election manifesto committee formed by T.V.K. vijay, J.C.D. Prabhakar given chanceTVK IT Wing
2 min read

தமிழக சட்டசபை தேர்தல்

Vijay Forms Committee for TVK Election Manifesto : தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் முடுக்கி விட்டு இருக்கின்றன. தமிழக வெற்றிக் கழகமும் முதன்முறையாக தேர்தலை சந்திப்பதால், அதற்கான முயற்சிகளை படிப்படியாக முன்னெடுத்து வருகிறது.

நீதிமன்றத்தில் “ஜனநாயகன்” படம்

தனது கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியீட்டை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தார், தவெக தலைவரும், நடிகருமான விஜய். ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படம் வெளியீடு தள்ளிப்போய் இருக்கிறது.

ரசிகர்கள், தொண்டர்கள் விரக்தி

நீதிமன்றத்தில் ஜனநாயகன் படக்குழு சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தணிக்கை சான்றிதழ் வழங்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், உடனடியாக தணிக்கை துறை மேல்முறையீடு செய்தது. இதனால்,, ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விஜய் மட்டுமில்லாமல், அவரது ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

தவெக தேர்தல் அறிக்கை குழு

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை குழுவை அமைத்து தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில், ”தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு. நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது.

அனைத்து தரப்பினரையும் சந்திக்கும் குழு

இதற்காகச் சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு. தமிழகம் முழுவதும் பொதுமக்கள். சிறு, குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார & தொழில் வல்லுனர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள். விவசாயச் சங்கங்கள். கல்வியாளர்கள். மருத்துவர்கள். செவிலியர்கள். மகளிர் அமைப்புகள். இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறவுள்ளது.

வளர்ச்சி பாதையில் தமிழகம் - தேர்தல் அறிக்கை

அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையினைத் தயார் செய்யவுள்ளது.

தேர்தல் அறிக்கைக் குழு :

1.திரு. Dr. K.G. அருண்ராஜ்

2. J.C.D. பிரபாகர்

3. திரு. A. ராஜ்மோகன்

4. T.S.K. மயூரி

5. பேராசிரியர். .A. சம்பத்குமார்

6. M.அருள் பிரகாசம்

7. விஜய் R. பரணிபாலாஜி

8. . முகமது பர்வேஷ்

9. . T.K பிரபு

10. K. கிறிஸ்டி பிருத்வி

11. M.K. தேன்மொழி பிரசன்னா

12. வழக்கறிஞர் சத்யகுமார்

மேற்கண்ட குழுவினருக்குக் கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதோடு, அந்தந்தப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சந்திக்கும் பொழுது தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாக” அந்த அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

செங்கோட்டையனுக்கு வாய்ப்பில்லை

இந்தக் குழுவில் அண்மையில் தவெகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் J.C.D. பிரபாகர் இடம்பெற்று இருக்கிறார். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in