
காமராஜ் குறித்து திருச்சி சிவா அவதூறு பேச்சு :
Trichy Siva Speech About Kamarajar : சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, “காமராஜருக்கு ஏசி இல்லை என்றால் உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதால், தங்கும் இடங்களில் எல்லாம் குளிர்சாதன வசதி செய்துதர கருணாநிதி உத்தரவிட்டதாகவும், உயிர்போகும் முன்பு கருணாநிதியின் கையைப் பிடித்துக் கொண்டு, நீங்கள்தான் இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று காமராஜர் கேட்டுக்கொண்டதாகவும்” கூறினார்.
கொந்தளிப்பில் காங்கிரஸ் கட்சி :
திருச்சி சிவாவின் விஷமத்தனமான இந்தப் பேச்சு(Trichy Siva Speech) காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தது.
திருச்சி சிவாவிற்கு கடும் கண்டனம் :
திருச்சி சிவாவின் பேச்சை(Trichy Siva Controversy) கடுமையாக விமர்சித்து இருக்கிறார், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான திருச்சி வேலுச்சாமி. “காமராஜர் ஒருத்தருக்காக ஏசி போட்டோம் என்று சொல்வது அசிங்கமா இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
திருச்சி சிவா போன்றோர் தமிழகத்தின் சாபம் :
தமிழகத்தின் சாபம் என்னவென்றால், இப்படிப்பட்டவர்கள் 20 ஆண்டுகளாக எம்பியாக இருப்பதுதான். ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள எமர்ஜென்சிக்கு முன்பு காலில் விழ வந்தவர்கள்தான் திமுகவினர். காமராஜருக்கு ஏசி வைத்ததாக கூறும் திருச்சி சிவாவிற்கு, ரஷ்யாவுக்கு கூட அவர் வேட்டி, சட்டையில் போய் வந்த வரலாறு தெரியாது.
மேலும் படிக்க : காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு : திருச்சி சிவாவுக்கு கண்டனம்
திருச்சி சிவா உளறுகிறார் :
உலகத் தலைவர்தான் காமராஜர்(Kamarajar). ஒன்றும் புரியாமல் திருச்சி சிவா உளறுகிறார். கருணாநிதி கையை பிடித்துக் கொண்டு காமராஜர் பேசியதாக கூறும் அவர், எப்போது கருணாநிதி காமராஜர் வீட்டிற்கு சென்றார் என விளக்க முடியுமா?. கற்பனையில் விற்பனை செய்யும் புத்தியை திருச்சி சிவா(Trichy Siva) எப்போதுதான் விடப் போகிறாரோ தெரியவில்லை.
பெண் எம்பியிடம் அடி வாங்கியவர் :
டெல்லி விமான நிலையத்தில் ஒரு பெண் எம்பியிடம் அடி வாங்கியும் அமைதியாக சென்ற திருச்சி சிவா போன்ற மனிதரிடம் இப்படிப்பட்ட பேச்சை தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்று திருச்சி வேலுச்சாமி(Trichy Velusamy) கடுமையாக விமர்சித்து உள்ளார்.
=====