அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை : வெள்ளியும் அதிகரிப்பு

Gold and Silver Rate Increased Today in Chennai : 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று இருமுறை அதிகரித்து, சவரனுக்கு ரூ.2,560 உயர்ந்து, அதிரடி காட்டி இருக்கிறது.
Shocking News Gold and Silver Rate Increased Today in Chennai
Shocking News Gold and Silver Rate Increased Today in ChennaiSource : Google
1 min read

உச்சத்தில் இருக்கும் தங்கம்

Gold and Silver Rate Increased Today in Chennai : புத்தாண்டு தொடங்கிய நாளில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது அந்த வகையில் நேற்று முன்தினம் குறைந்த தங்கத்தின் விலை இன்று காலை மீண்டும் அதிகரித்த நிலையில், மாலையில் மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

சரிவில் இருந்த தங்கத்தின் விலை

நேற்று பிப்ரவரி 2ஆம் தேதி நிலவரப்படி 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு மட்டுமே ரூ.950 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும், சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை

இன்று (03.02.26) காலை 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,030க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,240க்கும் விற்பனை செய்யப்பட்டது.

18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,210க்கும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.97,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மாலையில் மீண்டும் விலை அதிகரிப்பு

மாலை வேளையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.14,270க்கும், சவரனுக்கு ரூ.1,920 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.12,210க்கும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.97,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,560 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையும் உயர்வு

வெள்ளி விலையும் உயர்ந்து கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.300க்கும், கிலோவுக்கு ரூ.20,000 அதிகரித்து, ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in