

Should he enter politics or not? Raghava Lawrence seeks the public's opinion! Teaming up with Vijay is confirmed!
தமிழக முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடிகர்,இயக்குநர், டான்ஸ் மாஸ்டர், சமூக சேவகர் என பன்முகத் தன்மை கொண்டவரான ராகவா லாரன்ஸ் தற்போது அரசியலில் நுழைவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், எந்த பிரதி பலனையும் எதிர்பாராமல் உங்கள் கடமையை செய்யுங்கள். உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்கு தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் நுழைவேன் என்று நினைக்கவில்லை
மேலும் தான் அரசியலில் நுழைவேன் என்று நினைக்கவில்லை என்றும்,அரசியலில் பணமோ சீட்டோ எனக்கு தேவை இல்லை என்றும் என் நம்பிக்கைக்குரிய நெருக்கமான ஒருவர் அரசியலில் நுழைந்தால் அவருடன் இணைந்து, ஏற்கனவே தனிநபராக செய்ததை விட பெரிய அளவில் இந்த சமூகத்திற்கு சேவையாற்றுவேன் என்று கூறியுள்ளார்.
வீடியோ மூலம் ராகவா லாரன்ஸ் விளக்கம்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார்.
ரஜினியின் உத்வேகமும், விஜய்யின் மாற்றமும்
ஆரம்பத்தில் தனது குருநாதரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பால் ஈர்க்கப்பட்டதாகவும் ஆனால், ரஜினிகாந்த் அந்த முடிவைக் கைவிட்டதால், தம்மாலும் அப்போது அரசியலுக்கு வர முடியாமல் போனதாகவும் தெரிவித்தார்.
மேலும், சாதி-மத அரசியல் மற்றும் ஓட்டுக்குக் காசு கொடுக்கும் கலாச்சாரம் காரணமாகத் தனது தாய் லாரன்ஸின் அரசியல் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறினார்.
விஜய் முதல்வராக பதவியேற்ற பிறகு
இருப்பினும், தமிழகத்தில் நீண்ட காலமாக இருந்த அரசியல் முறையை உடைத்தெறிந்து, மாபெரும் மாற்றத்துடன் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது தாயின் எண்ணம் மாறிவிட்டதாகவும், தற்போது அவர் தனக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டதாகவும் லாரன்ஸ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
ரசிகர்களின் பதிலுக்காக காத்திருக்கும் லாரன்ஸ்
தான் ஒரு படிக்காத எளிய மனிதன் என்று குறிப்பிட்ட லாரன்ஸ், அரசியலுக்கு வர தனக்கு தகுதி உள்ளதா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை தனது ரசிகர்களிடமே விட்டுள்ளார்.
நான் அரசியலுக்கு வர வேண்டுமா இல்லையா
"நான் அரசியலுக்கு வர வேண்டுமா இல்லையா என்பதை நீங்கள் கமெண்ட்டில் சொல்லுங்கள். 'வேண்டாம்' என்று சொன்னால், நான் எப்போதும் போல எனது அறக்கட்டளை மூலம் சமூக சேவைகளைத் தொடர்வேன். 'ஆம்' என்று சொன்னால், யாருடன், எப்போது பயணிக்க வேண்டும் என்பதை உங்களின் ஆசியோடு அறிவிப்பேன்." என்று கூறியுள்ளார்.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்
முதலமைச்சர் விஜய் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரு தொகுதிகளில் பெரம்பூர் தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டு, திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனால் அங்கு விரைவில் இடைத்தேர்தல் வரவிருக்கும் நிலையில், அந்த தொகுதியில் ராகவா லாரன்ஸ் போட்டியிடப் போவதாகப் பரவலான வதந்திகள் எழுந்த நிலையில், தான் முதலில் முறைப்படி அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அதற்குப் பிறகே இது சாத்தியம் என்றும் அவர் லாரன்ஸ் கூறியுள்ளார்.
தவெகவில் இணைந்து பணியாற்றவே அதிக வாய்ப்பு
தற்போதுள்ள அரசியல் சூழலில், லாரன்ஸ் தனியாக கட்சி தொடங்குவதை விட, தனது நீண்ட கால நண்பரும், திரையுலக நன்பருமான முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்து பணியாற்றவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசபடுகிறது.
=====