வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை சரிபார்ப்பது எப்படி? : எளிமையான வழி!

SIR 2026 Tamil Nadu : How to check your name in final voter list? : திரையில் காண்பிக்கப்படும் தொகுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? என இப்போது உறுதி படுத்திக்கொள்ளலாம்.
SIR 2026 Tamil Nadu : How to check your name in the voter list? voters eci gov, in The easy way!
SIR 2026 Tamil Nadu : How to check your name in the voter list? voters eci gov, in The easy way!source:google
1 min read

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்

SIR 2026 Tamil Nadu : How to check your name in final voter list? : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு, சுமார் 97 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனால், வாக்காளர் எண்ணிக்கை சுமார் 5.44 கோடியாக குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

வாக்காளர் திருத்தப் பணிகள்

இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், சுமார் 34 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

டிசம்பர் 19 ஆம் தேதி முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 7.10 லட்சம் பேரும், 1.84 லட்சம் பேர் நீக்கம் செய்யக்கோரியும் 5.51 லட்சம் பேர் திருத்தம் செய்யக்கோரியும் விண்ணப்பித்தனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.

இதனைத்தொடர்ந்து தற்போது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர்கள் எண்ணிக்கை

அதன்படி, தமிழ்நாடு முழுவதுமான வரைவு வாக்காளர் பட்டியலில், ஆண்கள் 2,77,38,925, பெண்கள் 2,89,60,838 மூன்றாம் பாலினத்தவர் 7,617 என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,67,07,380 இடம்பெற்றுள்ளது.

மேலும், நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 74,07,207 ஆக உள்ளது.

மேலும் படிக்க:தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி : 74,07,207 பேர் நீக்கம்: இறுதிப் பட்டியல் தயார்

நீங்கள் உறுதி படுத்திக்கொள்ள

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா? என்பதை தெரிந்துகொள்ள அந்தந்த பகுதி மண்டல அலுவலகங்கள் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் இந்தப் பட்டியலைப் பார்வையிடலாம்.

இணையதள முகவரி

நேரடியாக நீங்களே பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் எனில், வாக்காளர் சேவை இணையதளம் (voters.eci.gov.in) அல்லது தமிழக தேர்தல் ஆணைய இணையதளத்தில் (elections.tn.gov.in) சரிபார்த்துக் கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்க

  1. voters.eci.gov.in அல்லது elections.tn.gov.in உள்ளே நுழையவும்.

  2. இதில் ஏதேனும் ஒரு இணையதள முகவரியில் உள்ளே சென்றதும் உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணை உள்ளிடவும்.

  3. அதில் உங்கள் பெயர், வயது, உங்கள் தொகுதி போன்ற தேவையான விவரங்களை உள்ளிட வேண்டும்.

  4. தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்ட பிறகு search பொத்தானை அழுத்தினால் உங்கள் வாக்காளர் விவரங்கள் திரையில் தோன்றும்.

  5. திரையில் காண்பிக்கப்படும் தொகுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? என இப்போது உறுதி படுத்திக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in