தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி : 74,07,207 பேர் நீக்கம்: இறுதிப் பட்டியல் தயார்

Election Commission Released Tamil Nadu SIR Final Voters List 2026 : தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலின் இறுதி பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
SIR Final Voters List 2026 5.67 crore voters in Tamil Nadu: 74,07,207 voters removed: Election Commissioner!
SIR Final Voters List 2026 5.67 crore voters in Tamil Nadu: 74,07,207 voters removed: Election Commissioner!source:google
2 min read

5.67 crore voters in Tamil Nadu: 74,07,207 voters removed: Election Commissioner!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்

Election Commission Released Tamil Nadu SIR Final Voters List 2026 : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு, சுமார் 97 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால், வாக்காளர் எண்ணிக்கை சுமார் 5.44 கோடியாக குறைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

39 லட்சம் பேர் விண்ணப்பம்

இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், சுமார் 34 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதனைத்தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 13,76,624, பெண் வாக்காளர்கள் 7,04,689, ஆண் வாக்காளர்கள் 6,71,742, மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் 193 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 11,92,194, பெண் வாக்காளர்கள் 6,13,917, ஆண் வாக்காளர்கள் 5,78,080, மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் 197 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 22,60,036, பெண் வாக்காளர்கள் 11,55,144, ஆண் வாக்காளர்கள் -11,04,511 மூன்றாம் பாலினம்-381பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டம்

சென்னை மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 28,30,936, பெண் வாக்காளர்கள் 14,64,344, ஆண் வாக்காளர்கள் 13,65,763, மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் 829 பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம்

தேனி மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்-க்கு முன் மொத்த வாக்காளர்கள் 11,30,303 , டிசம்பர் 19 வரைவு வாக்காளர் பட்டியலின் போது 10,04,564 வாக்காளர்கள் பிப்ரவரி 23 இறுதி வாக்காளர் பட்டியலில் 10,33,373 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5,796 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்ட இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மொத்த வாக்காளர்கள் 14,97,417, பெண் வாக்காளர்கள்- 7,68,632, ஆண் வாக்காளர்கள் -7,28,539, மூன்றாம் பாலினம் - 246

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர்கள் பட்டியலின்படி, மொத்த வாக்காளர்கள் - 15,10,550, பெண் வாக்காளர்கள்- 7,59,390, ஆண் வாக்காளர்கள் - 7,51,016 வாக்காளர்கள்

கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 20,15,196, பெண் வாக்காளர்கள்- 10,23,976, ஆண் வாக்காளர்கள் 9,91,527 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும்

இறுதியாக தமிழ்நாடு முழுவதுமான வரைவு வாக்காளர் பட்டியலில், ஆண்கள் 2,77,38,925, பெண்கள் 2,89,60,838 மூன்றாம் பாலினத்தவர் 7,617 என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,67,07,380 இடம்பெற்றுள்ளது.

மேலும், நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 74,07,207 ஆக உள்ளது.

முதல்வரின் கொளத்தூரில்,

முதல்வரின் தொகுதியான கொளத்தூர் பகுதியில் மொத்தம் 2,07,251 வாக்காளர்கள். அதிலிருந்து தற்போது 83,404 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் உறுதிபடுத்திக்கொள்ள

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா? என்பதை தெரிந்துகொள்ள அந்தந்த பகுதி மண்டல அலுவலகங்கள் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் இந்தப் பட்டியலைப் பார்வையிடலாம்.

இணையதள முகவரி

நேரடியாக நீங்களே பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் எனில்,  வாக்காளர் சேவை இணையதளம் (voters.eci.gov.in) அல்லது தமிழக தேர்தல் ஆணைய இணையதளத்தில் (elections.tn.gov.in) சரிபார்த்துக் கொள்ளலாம்.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in