

தமிழகம் - 6.36 கோடி SIR படிவங்கள்
SIR Electoral Roll Voter List Removed in Tamil Nadu : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், எஸ்ஐஆர் எனப்படும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவம்பர் 4ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், டிசம்பர் 1ம் தேதி வரை, 6 கோடியே 36 லட்சம் SIR கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டன.
5.18 கோடி படிவங்கள் பூர்த்தி
இதில் 5 கோடியே 18 லட்சம் வாக்காளர்களிடன் இருந்து கணக்கீட்டு படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 25 லட்சத்து 72 பேர் உயிரிழந்தவர்களாகவும், ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் 3 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு வாக்குரிமை இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இது தவிர, 39 லட்சத்து 27 ஆயிரம் நிரந்தரமாக இடம் பெயர்ந்ததும், 8 லட்சத்து 95 ஆயிரம் பேர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளது தெரிய வந்துள்ளது.
77 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?
இதன் காரணமாக வரும் 16ஆம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் தமிழகத்தில் மொத்தம் 77 லட்சம் வாக்காளர்கள் வரை நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை - 10.40 லட்சம் நீக்கம்?
சென்னையில் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 40 ஆயிரம் பேர் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பீகார் மாநிலத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தேசிய அளவில் விவாதப் பொருளானது. இந்தநிலையில், தமிழகத்தில் நடைபெறும் எஸ்ஐஆர் பணிகள், நீக்கப்படும் வாக்காளர்கள், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு போன்றவை அடுத்தடுத்து சலசலப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
இதனிடையே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் தேர்தல் அலுவலர்கள் பணிச் சுமையால் பாதிக்கப்பட்டால் அவர்களை விடுவித்துவிட்டு வேறு நபர்களை நியமிக்கலாம், தேவைப்பட்டால் கூடுதலாக பணியாளர்களை நியமிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலை வழங்கி உள்ளது.
=====