

ஜன.15 பொங்கல் பண்டிகை
Pongal Special Trains 2026 Time Table Ticket Booking Date : பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. 14ம் தேதி போகி பண்டிகை, 16ம் தேதி மாட்டுப் பொங்கல், 17ம் தேதி(Pongal Train Ticket Booking 2026 Opening Date) காணும் பொங்கல் வருகிறது. பொங்கல் திருநாளை சொந்த ஊர்களில் கொண்டாட பொதுமக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.
தெற்கு ரயில்வே - சிறப்பு ரயில்கள்
அவர்கள் பயணிக்க வசதியாக, சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தநிலையில், பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து(Southern Railway Announcement) இருக்கிறது.
நாகர்கோவில் - தாம்பரம்
நாகர்கோவில் - தாம்பரம் இடையேயான சிறப்பு ரயில்(Nagercoil To Tambaram) வரும் 11 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் தாம்பரம் - நாகர்கோவில் இடையே வரும் வரும் 14, 21 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
தாம்பரம் - கன்னியாகுமரி
தாம்பரம் - கன்னியாகுமரி இடையிலான சிறப்பு ரயில் வரும் 12, 19 ஆகிய தேதிகளிலும்(Tambaram To Kanniyakumari), மறுமார்க்கத்தில் வரும் 13, 20 தேதிகளிலும் இயக்கப்படும்.
நெல்லை - செங்கல்பட்டு
நெல்லை - செங்கல்பட்டு இடையேயான அதிவிரைவு ரயில் வரும் 9, 16 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் வரும் 10, 17ஆகிய தேதிகளிலும்(Tirunelveli To Chengalpattu) இயக்கப்படுகிறது.
செங்கல்பட்டு - நெல்லை அதிவிரைவு ரயில்
செங்கல்பட்டு - நெல்லை அதிவிரைவு ரயில் 9, 16 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் வரும் 10, 17 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படவுள்ளது.
கோவை - சென்னை சென்ட்ரல்
கோவை - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் வரும் 11, 18 ஆகிய தேதிகளிலும்(Coimbatore To Chennai Central), மறுமார்க்கத்தில் வரும் 12, 19ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும்.
போத்தனூர் - சென்னை சென்ட்ரல்
போத்தனூர் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் வரும் 14, 21 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் அதே நாட்களில் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
நெல்லை - எழும்பூர்
நெல்லை - எழும்பூர் அதிவிரைவு ரயில் வரும் 8ம் தேதியும், மறுமார்க்கத்தில் 9ம் தேதியும் இயக்கப்படும்.
மங்களூர் - சென்னை சென்ட்ரல்
மங்களூர் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் வரும் 13ஆம் தேதியும், மறுமார்க்கத்தில் வரும் 14ஆம் தேதியும் புறப்படும் என அறிவித்துள்ளது.
ஈரோடு - செங்கோட்டை
ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் வரும் 13ஆம் தேதி புறப்படும் எனவும், அதே ரயில் வரும் 14ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து போத்தனூர் சென்றடையும்.
ராமேஸ்வரம் - தாம்பரம்
ராமேஸ்வரம் - தாம்பரம் இடையேயான சிறப்பு ரயில் வரும் 13, 20 தேதிகளில் இயக்கப்படும் எனவும், மறுமார்க்கத்தில் வரும் 14, 21தேதிகளில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாளை முதல் முன்பதிவு
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை ( ஜனவரி 4) காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
===