பிப்.17ல் இடைக்கால பட்ஜெட்: அறிவிப்புகள், என்னவெல்லாம் இருக்கும்!

Speaker Appavu Announced date for Tamil Nadu government's Interim Budget 2026 : தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தேதியை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
Speaker Appavu has announced the date for the Tamil Nadu government's interim budget 2026 on February 17 latest news in tamil
Speaker Appavu has announced the date for the Tamil Nadu government's interim budget 2026 on February 17 latest news in tamilSource : Google
1 min read

Speaker Appavu Announced date for Tamil Nadu government's Interim Budget 2026 : தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியானது விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் பிப். 17 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது

சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டமானது, தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 26(1)ன் கீழ் வருகிற 17ஆம் தேதி காலை 9.30 மணிக்கு(TN Interim Budget 2026 Date and Time in Tamil) சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

இடைக்கால பட்ஜெட் தாக்கல்

மேலும் அன்றைய தினமே 2026-2027 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்றும் கூறியுள்ளார்.

அலுவல் குழு கூடி, எத்தனை நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மானிய கோரிக்கைகள்

மேலும் வருகிற 20 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 193(1)-ன் கீழ் 2026-2027 ஆம் ஆண்டிற்கான முன்பண மானிய கோரிக்கைகளும் , சட்டப்பேரவை விதி 189(1)-ன் கீழ் 2025-2026 ஆம் ஆண்டிற்கான செலவின தாக்கல் கோரிக்கையும் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

சட்டப்பேரவை நிகழ்வுகள் பதிவேற்றம்

மேலும் சட்டப்பேரவை நிகழ்வுகள் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் யார் வேண்டுமானாலும் அதைப்பார்த்து முழுமையான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் மானிய கோரிக்கைகள், சிறப்பு தீர்மானம் குறித்த அமைச்சர்களின் பதிலுரைகள் என அனைத்து நிகழ்வுகளும் நேரலை செய்யப்படுவதாகவும் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது சட்டமன்ற நிகழ்வுகளை

சட்டசபை தேர்தல் வருவதால், பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள், சலுகைகள் இடம் பெறும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in