தென் மாவட்டங்களுக்கு ” தீபாவளி சிறப்பு ரயில்கள்” : சொந்த ஊர்களுக்கு செல்ல கவலை வேண்டாம் : நாளை முன்பதிவு...!

தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
Special trains announced for convenience of those traveling to their hometowns for Diwali
Special trains announced for convenience of those traveling to their hometowns for Diwalisource:thamizhalai,ai generated
1 min read

தீபாவளி பண்டிகை - மக்கள் ஆர்வம்

diwali special trains southern railway : தீபாவளி பண்டிகை வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் கொண்டாடப்பட இருக்கு. இதை முன்னிட்டு, இந்த வார இறுதியில், பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வமாக இருக்கிறார்கள்.

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி, தென்காசிக்கு ரயில்கள்

சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் தென்காசிக்கு நவம்பர் 5ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை - கன்னியாகுமரி சிறப்பு ரயில்

ரயில் எண்: 06151: சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு நவம்பர் 5ஆம் தேதி 11.50 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், மறுநாள் 3.15 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்றடைகிறது.

ரயில் எண் 06152: நவம்பர் 9ஆம் தேதி இரவு 11.20 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.00 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

சென்னை - தென்காசி சிறப்பு ரயில்

ரயில் எண் 06049: தாம்பரம் - தென்காசி விரைவு சிறப்பு ரயில், நவம்பர் 7ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 05.00 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, அதே நாளில் மாலை 16.45 மணிக்கு தென்காசியை வந்தடையும்.

ரயில் எண் 06050: செங்கோட்டை - தாம்பரம் விரைவு சிறப்பு ரயில், நவம்பர் 9ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் 3 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

சிறப்பு ரயில்கள் - நாளை முன்பதிவு

இந்த சிறப்பு ரயில்களுக்காக டிக்கெட் முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு சிரமத்தை போக்க சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

=================