
தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு :
TN Govt on 11th Board Exam Cancelled in Tamil Nadu : மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதற்கு மாற்றாக மாநில கல்விக் கொள்கை வகுக்கப்படும் என்று 2021-22ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
மாநில கல்விக் கொள்கை :
அந்த குழு 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாநில கல்வி கொள்கை சமர்ப்பித்தது. இதில், இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்பட வேண்டும் என்றும், 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு(TN Public Exam) கூடாது என என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.
தமிழே முதல் மொழி :
பள்ளிக் கல்வியில் தமிழை முதல் மொழியாக நிலைநிறுத்த வேண்டும் என்றும், தொடக்க நிலை முதல் பல்கலைக்கழக நிலை வரை தமிழ்வழிக் கல்வியை வழங்க வேண்டும் என்றும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.
மாநில கல்விக் கொள்கை வெளியீடு :
இந்நியைில் மாநில கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்(State Education Policy 2025). இதில் 11 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது(11th Public Exam Cancelled) என்றும் 10 மற்றும் 12 வகுப்பிற்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 ஆம் வகுப்பு தடையற்ற கல்வி என்பதை உறுதி செய்யப்படும். ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண்களை மட்டுமே வைத்து தேர்ச்சியை முடிவு செய்யக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : சிபிஎஸ்இ பொதுத்தேர்வு : 75% வருகை பதிவேடு கட்டாயம்
11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து :
மாநில கல்வி கொள்கை வெளியிடப்பட்டுள்ளதால் நடப்பு ஆண்டு முதலே 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து(11th Board Exam Cancelled in Tamil Nadu) செய்யப்படுவதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மாணவர்களுக்கு அழுத்தம் குறையும் என்று அவர் குறிப்பிட்டார்.
=====