

இந்தியாவிற்கே தமிழகம் முன்னோடி
தமிழ்நாடு மருத்துவத்துறையில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் நகர்ப்புற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை தினமும் லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செவிலியர்கள் தேவை அதிகரிப்பு
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், மருத்துவர்களுக்கு இணையாகச் செவிலியர்களின் தேவையும் அதிகரித்துள்ளது.
புதிதாக 1,695 பணியிடங்கள்
இதைக் கருத்தில் கொண்டே 1,695 புதிய பணியிடங்களை உருவாக்க அரசு முன்வந்துள்ளது. இது அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான பராமரிப்புத் தரத்தை உயர்த்தவும், பணியில் உள்ள செவிலியர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும் பெரிதும் உதவும்.
செவிலியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு 42 கோடியே 72 லட்சம் ரூபாயை ஒதுக்கி உள்ளது.
செவிலியர் கல்வி, பணி நிரந்தர நடவடிக்கை
புதிய பணியிடங்கள் உருவாக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், செவிலியர் கல்வியை விரிவுபடுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்ட தகவல்களின்படி, தமிழ்நாட்டில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.
நெல்லை, திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா 100 இடங்களுடனும், கோவையில் 60 இடங்களுடனும் இக்கல்லூரிகள் அமைய உள்ளன. இதன் மூலம் ஏழை, எளிய மாணவர்களின் செவிலியர் கனவு நனவாகும்.
செவிலியர்கள் எதிர்பார்ப்பு
மேலும், நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த 2,500 செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,695 புதிய செவிலியர் பணியிடங்கள் மற்றும் 7 புதிய செவிலியர் கல்லூரிகள் என்ற அரசின் அறிவிப்புகள் மாநிலத்தின் மருத்துவச் சேவையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
=====================